Pages

Monday, February 10, 2014

பி.எப்., நிரந்தர கணக்கு எண் அமைச்சகம் புதிய திட்டம

தொழிலாளர் சேம நல நிதியகத்தில் (இ.பி.எப்.ஓ.,) உள்ள, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கும், நிரந்தர கணக்கு எண் வழங்கும் படி, தொழிலாளர் நல அமைச்சகம், சேம நல நிதியகத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:தொழிலாளர் சேம நல நிதியகத்தில், தற்போது, 5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் வாயிலாக, கணக்கு எண்களை, சேம நல நிதியகம் வழங்கியுள்ளது.

இவர்கள், ஒரு நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்துக்கு செல்லும் போது, அவர்களின் கணக்கு மற்றும் எண்ணும் மாறுகிறது. இதனால், அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், ஒப்பந்தம் முடிந்ததும், வேறொரு நிறுவனத்திற்கு பணியாற்றச் செல்வர். இதனால், தொழிலாளர் சேம நல நிதியின் பயன்கள், இவர்களுக்கு முழுமையாக கிடைப்பது இல்லை.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 5 கோடி உறுப்பினர்களுக்கும், நிரந்தர கணக்கு எண் வழங்கும் படி, சேம நல நிதியகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, தொழிலாளர் நலத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment