Pages

Sunday, December 08, 2013

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிய உத்தரவு

   பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவி யரின் விவரங்களை, வாரத்திற்கு, எட்டு மாவட்டங்கள் வீதம், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியரின் விவரங்களை, தேர்வுத் துறை, ஏற்கனவே வழங்கிய படிவத்தின் மூலம், தலைமை ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். இந்த விவரங்களை பெறும் பணியை, 10ம் தேதிக்குள் முடிக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது

. இதையடுத்து, அந்த விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். ஒரே நேரத்தில், அனைத்து மாவட்ட விவரங்களும், அப்லோட் செய்ய முடியாது என்பதால், ஒரு வாரத்திற்கு, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவரங்கள் மட்டும் பதிய வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த மாவட்டங்கள், எந்தெந்த தேதியில், இணையதளத்தில், விவரங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், தேர்வுத் துறை தெரிவித்துள்ளது

. ஜன., 10ம் தேதிக்குள், இந்த பணி முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜன., இறுதியில், செய்முறை தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, பதிவு எண்கள் வழங்கப்படும். பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி, முதல் வாரத்திலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில் இருந்தும், செய்முறை தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment