Pages

Sunday, December 01, 2013

அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்புச்சத்து மாத்திரை : சுகாதாரத்துறை திட்டம்

""ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் உள்ளதாக,'' சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அளவில், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், அரசு பள்ளிகளில் படிக்கும் வளரிளம் (14-18 வயது) மாணவ,மாணவிகள் பலருக்கு உடலில் இரும்பு சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இச்சத்து குறைவால் மாணவிகளுக்கு மாதவிடாய் பிரச்னை, திருமணத்திற்கு பின் கர்ப்பம் தரித்தலில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஆண்களுக்கு ரத்த சோகை போன்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படும

். இதை தவிர்க்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறையினருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; அரசுபள்ளி மாணவர்களிடம் இரும்பு சத்தை அதிகரிக்க, சத்துணவு வழங்கப்படுகிறது. இருப்பினும், சிலருக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கிறது. இந்த மாத்திரைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்குவோம். அவர்கள், மதிய உணவு முடித்த, மாணவர்களுக்கு வழங்கவேண்டும். இதற்காக, ஆசிரியர் குழுவை ஏற்படுத்தவேண்டும், என்றார்.

No comments:

Post a Comment