Pages

Friday, December 06, 2013

குரூப் 4 தேர்வு: சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு கலந்தாய்வ

குரூப் 4 தேர்வின் மூலம் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தொடங்குகிறது. மூன்று நாள்கள் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என். பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி. எஸ்.சி. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 2007-08 மற்றும் 2012-13 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப் 4 தொகுதியில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக கலந்தாய்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் நிரப்பப்படாத 449 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 11 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகிலுள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பதிவெண்கள் மற்றும் அவர்கள் பங்கேற்க வேண்டிய நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன என்று தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment