Pages

Tuesday, December 10, 2013

15 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு கட்டண சலுகை அளிப்பு

   பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த, சரியான புள்ளி விவரம், இம்மாத இறுதியிலோ அல்லது, ஜனவரி, முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

எனினும், 17 லட்சம் பேர், கண்டிப்பாக எழுதுவர். இதில், 90 சதவீதம் பேர், தமிழ் வழியில் படித்து, தேர்வை எழுத உள்ளனர். அதன்படி, 15.3 லட்சம் மாணவர், தமிழ் வழியில் படிப்பவர்களாக இருப்பர் என்றும், இவர்கள் அனைவருக்கும், தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டணத்தை, தமிழக அரசு, தேர்வுத் துறைக்கு வழங்கி விடுகிறது. பிளஸ் 2 தேர்வர், 225 ரூபாயும், பத்தாம் வகுப்பு தேர்வர், 125 ரூபாயும், தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவியர் மட்டும், இந்த கட்டணத்தை செலுத்தி உள்ளனர். மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கில வழியில் படிக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை, 1.5 லட்சத்திற்குள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment