Pages

Saturday, November 09, 2013

தமிழகத்தின் 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலை அந்தஸ்து

நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் பல்கலைக்கழக நிதிக் குழு (யு.ஜி.சி.,) இணைந்து, டில்லியில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தின. இதில், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, ஒருமை வகை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகள், அவர்களே மாணவர்களுக்கு பட்டம் வழங்கிக் கொள்ளலாம். பிற பல்கலைக் கழகங்களை சார்ந்து இருக்க வேண்டாம். அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. கல்லூரிகள் வருமாறு:

கோவையில், கொங்கு நாடு கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி; ஈரோட்டில், வெள்ளாளர் மகளிர் கல்லூரி; திருச்சியில், செயின்ட் ஜோசப், திருச்சி ஜமால் முகமது, திருச்சி தேசிய கல்லூரிகள்; மயிலாடு துறையில், ஏ.வி.சி., கல்லூரி; சிவகாசியில், ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி; மதுரையில், பாத்திமா கல்லூரி; பாளையங்கோட்டையில், செயின்ட் சேவியர் கல்லூரி உட்பட, 11 கல்லூரிகள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளுக்கு, மூன்றாண்டு இடைவெளியில் அடிப்படை கட்டமைப்பு நிதியாக, 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment