தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணைந்து, தொடக்கப் பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு துவக்க நிலை, உயர்நிலை கற்பித்தல் குறித்த சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.
ஒவ்வொரு மாதமும் 10 நாட் களுக்கு மேல் இப்பயிற்சி நடந்தது. இதில், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தொடர் பயிற்சியால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது என்ற புகாரால் பயிற்சி நாட்களை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ஒதுக்கிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டும், தொடர் பயிற்சியால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்கவும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை குறைக்க திட்டமிட்டனர்.
மாதந்தோறும் 3 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் என, அனைவருக்கும் கல்வி இயக்கக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment