Pages

Tuesday, October 22, 2013

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்குமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனத்தில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது

. கடந்த 2012ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு மேயிலும், முக்கிய தேர்வு நவம்பரிலும், கடந்த 2013 ஏப்ரலில் நேர்காணலும், ஜூனில் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்திய அளவில் 180 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக கண்டறியப்பட்டு, அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதில் சொந்த மாநிலங்களில் பணியாற்ற 61 பேரும், பிற மாநிலங்களில் பணியாற்ற 119 பேரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 9 காலியிடங்களுக்கு, சொந்த மாநிலத்தை சேர்ந்த 3 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் 2 பேர் உள்ளனர். இவர்கள் இருவருமே பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள். பொதுப் பிரிவில் (ஓ.சி.,) உள்ள 5 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர், அடுத்த மாநிலத்தை சேர்ந்தவர். பழங்குடியின வகுப்பினர் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 180 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சொந்த மாநிலங்களிலும், இருபங்கு அடுத்த மாநிலங்களிலும் நியமிக்கப்படுவர். பொதுப் பிரிவில் மொத்தம் 94 பேரில், 19 பேர் சொந்த மாநிலத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும் நியமிக்கப்படுவர். பிற்படுத்தப்பட்டோர் 45 பேரில் 22 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும், தாழ்த்தப்பட்டோர் 28 பேரில், 11 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும், பழங்குடியினர் 13 பேரில் 9 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும் நியமிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment