Pages

Wednesday, September 25, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை-தமிழக அரசு

   ஆசிரியர் தகுதித் தேர்வில் இட  ஒதுக்கீடு முறையில், மதிப்பெண்கள குறைக்க முடியாது என்றும், கல்வித் தரத்தில் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், சென்னை  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு முறையில் மதிப்பெண்களில் சலுகை வழங்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கலாகி  இருந்தது.

அந்த மனுவுக்கு இன்று பதில் அளித்துள்ள தமிழக அரசு, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தகுதித் தேர்வு முறையை தமிழக அரசு நடத்தி வருகிறது. எனவே, தரமான கல்வியை வழங்க வேண்டும் என்கிற கொள்கையை தளர்த்தி சமரசம் செய்து கொள்ளும்  பேச்சுக்கே இடமில்லை என்று, தமிழக அரசு சார்பில் மனுதாரரின் மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment