Pages

Wednesday, September 25, 2013

அக்., 3ல் அனைத்து பள்ளிகளுக்கும் 2ம் பருவ புத்தகங்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அக்.,3 ல், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்திற்கான, பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். புத்தகச்சுமையை குறைத்து, கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வி திட்டத்தில், 6 முதல் 9 வகுப்புவரை உள்ள மாணவ, மாணவியருக்கு, முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்பருவ தேர்வு முடிந்து, தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்.,3 ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அன்றே, இந்த வகுப்பு மாணவ, மாணவியருக்கு, இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இருந்து வந்துள்ள அப்புத்தகங்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், அந்ததந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அங்கு, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை கொடுத்து, தங்களது பள்ளிகளுக்கான புத்தகங்களை, தலைமையாசிரியர்கள் பெற்றுச் செல்கின்றனர். இந்தவார இறுதிக்குள், இப்பணிகளை, முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment