Pages

Tuesday, August 20, 2013

இரண்டாவது கட்டமாக "ஹால் டிக்கெட்' வெளியீடு

குரூப்-4 தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' பெறாதவர்களுக்கு, அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நேற்று, "ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது. வரும், 25ம் தேதி, குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதை, 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான, "ஹால் டிக்கெட்'கள், கடந்த, 14ம் தேதி, www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தேர்வுக்கு, முறையாக விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை, 19ம் தேதிக்குள், தேர்வாணைய, "இ-மெயிலுக்கு' அனுப்பும்படி, தேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி, 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், நேற்று, "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டன. "இ-மெயில்' அனுப்பியும், "ஹால் டிக்கெட்' கிடைக்காத தேர்வர்கள் இருந்தால், அவர்கள், உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும், தேர்வாணைய அலுவலரை, 23, 24 தேதிகளில் அணுகலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment