தொழில்நுட்பக்கல்வித்துறை சார்பில் கணிணி சான்றிதழ் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், தேர்வு நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மையங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மேலும், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்திலும் (www.tndte.com) தேர்வு முடிவை பார்க்கலாம். தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்கள் ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படும். இந்த தகவலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment