Pages

Thursday, August 22, 2013

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

உடனடித் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், மறுகூட்டல் கோரி, இன்று முதல், 26ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது

: மாணவர்கள், எந்த ஒரு பாடத்திற்கும், மறுகூட்டல் கோரி, விண்ணப்பிக்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும். 27ம் தேதிக்குள், வங்கியில், கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இவ்வாறு, இயக்குனர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment