Pages

Sunday, August 18, 2013

டிட்டோஜாக் ஆயத்த கூட்டம், முதல் கட்ட வெற்றி

ஆசிரியர்களே,

அதி முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்ணன்,மோசஸ்,பாலசந்தர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வையம்பட்டி ராமசாமி, திருவண்ணாமலை ரக்‌ஷித், தமிழகஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி(மஜித்) சார்பில் துரை,சிங்காரவேலு, தொடக்கப்பபள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தியோடர் ராபின்சன்,அம்பை கணேசன்,எஸெஸ்டிஏ சார்பில் ரெக்ஸ் ஆனந்தகுமார்,ராபர்ட்,சதீஷ் கலந்து கொண்டனர்.

தொடக்கப்பள்ளி கூட்டணி ஆயத்த் மாநாடு காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை எனவும்,தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுவில் முடிவெடுத்தபின் கல்ந்துகொள்வதாகவும் ,பட்டதாரி சங்கம் உயர்னிலை,மேனிலை சங்கத்துடன் கலந்தாலோசித்து வருவதாக கூறியுள்ளது.

அனைத்து ஆசிரிய சங்கங்களும் சேர்ந்த்து போராட்டம்
மிக அவசியம்,அனைத்து சங்கங்களுடன் சேர்ந்து,கலந்து பேசவும் ஒருங்கிணைந்து களம் காண அனத்துஆசிரிய சங்க நிர்வாகிகள் ,மூத்த நிர்வாகிகள் திரு.முத்துசாமி,திரு.மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அனைத்து சங்கங்களிடமும் பேசி ஒற்றுமையுடன் போராவும்,அடுத்த கூட்டத்தில் அனைத்து சங்க பொதுச் செயலர்களும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கூட்டத்ற்க்கு அழைப்புவிடுத்து,கூட்டத்தை நடத்தியதற்கு அனைத்து சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment