Pages

Friday, June 21, 2013

தமிழ் பல்கலையில் பி.எட் சேர்க்கை அறிவிப்பு

் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டில் கல்வியியல் கல்லூரியில் இளங்கல்வியியல் (பி.எட்.,) பட்டப் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை நேரில் பெற விரும்புவோர் ரூ.600 பணமாகச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்திப்பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சான்றிதழ் அளித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழக முகவரிக்கு ஜூன் 28ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது 04362 - 227782, 226720 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment