Pages

Friday, May 10, 2013

ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு ; ஜூன் மாதத்திற்குள் முடிக்க அறிவுரை

ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பை, ஜூன் மாதத்திற்குள் முடிக்க கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் வரும் 15ல் ஆறாவது கணக்கெடுப்பு துவங்க உள்ளது. 26 கேள்விகள்: பொருளாதாரக் கணக்கெடுப்பாளர்களுக்கு, கணக்கு எடுப்பதற்கான அனைத்து உபகரணங்களும் வழங்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கட்டடத்திற்கு சென்று அந்த கட்டடத்தின் உரிமையாளர், அது வீடா அல்லது தொழிற்சாலையா, வீட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் செய்யும் தொழில்கள், கடை என்றால் என்ன வியாபாரம் செய்யப்படுகிறது. தொழிற்சாலை என்றால், என்ன பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எத்தனை பேர் இதில் பணியாற்றுகின்றனர். அவர்கள் வாங்கும் சம்பளம், தனிநபரின் வருமானம் உட்பட 26 கேள்விகள் கேட்கப்படும். தற்போது, வீட்டு வாடகையும், ரியல் எஸ்டேட் தொழிலையும் வருமானமாக சேர்த்துள்ளனர். வரும் ஜூன் மாதத்திற்குள் கணக்கெடுப்பை முடிக்க வேண்டும் என புள்ளியியல்துறை அதிகாரிகள், கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment