Pages

Thursday, May 16, 2013

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற வருவாய் உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு மத்திய மந்திரிசபை முடிவு

மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை ரூ.6 லட்சமாக மத்திய மந்திரிசபை உயர்த்தி உள்ளது. கிரீமிலேயர் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் முன்னேறியவர்களை (கிரீமிலேயர்) தவிர்ப்பதற்காக, ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உச்சவரம்பை நகர்ப்புறங்களில் ரூ.12 லட்சமாகவும், கிராமப்புறங்களில் ரூ.9 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்று இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சிபாரிசு செய்தது. ஆனால், இது சாத்தியம் இல்லை என்றும், ஒரே மாதிரியாக ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் மந்திரிகள் குழு சிபாரிசு செய்தது. ரூ.6 லட்சமாக உயர்வு இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்டோரில் இன்னும் அதிகமானோர் பலன் அடைவார்கள்.

  இதுதொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகமும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment