Pages

Tuesday, May 21, 2013

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 19-ல் தொடக்கம்

  பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வியாழக்கிழமைமுதல் (மே 23)  திங்கள்கிழமைவரை (மே 27) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7.04 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் பள்ளி மாணவராகவோ, தனித்தேர்வர்களாகவோ எழுதி தேர்ச்சிப் பெறாதவர்களும், வருகை தராதவர்களும் இந்த சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம்.

அனைத்துப் பாடங்களிலும் தோல்வியுற்றவர்கள்கூட இநதத் தேர்வை எழுதலாம். சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வியாழன் முதல் திங்கள் வரை அனைத்து நாள்களிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான எஸ்.பி.ஐ. சலானையும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். தேர்வுக் கட்டணம்: தேர்ச்சி பெறாத ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலம் மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை மாணவர்கள் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும

். இந்த எண்ணைப் பயன்படுத்தியே தங்களது சந்தேகங்களைத் தீர்க்கவோ, தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ, ஹால் டிக்கெட்டைப் பெறவோ முடியும். அதேபோல், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகலெடுத்தும் விண்ணப்பதாரர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்? பள்ளி மாணவர்கள் உடனடித் தேர்வுக்கான c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​  எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மே 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வை தனித்தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​ விண்ணப்பம் மற்றும் எஸ்.பி.ஐ. சலானை அவர்களின் மாவட்டத்துக்குரிய அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

No comments:

Post a Comment