Pages

Wednesday, April 10, 2013

பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு?

  தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக, பி.எட். கல்லூரிகளுக்கென கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி என்.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ரூ.46 ஆயிரத்து 500-ம், தரச்சான்று இல்லாத கல்லூரிகள் ரூ.41 ஆயிரத்து 500-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவைக்கேற்ப பி.எட். கல்லூரிகள் தொடங்கப்படும். மாநிலத்தில் மொத்தம் 706 பி.எட். கல்லூரிகள் உள்ளன. அதில், அரசுக் கல்லூரிகள் ஏழும், உதவிபெறும் கல்லூரிகள் 14-ம், தனியார் கல்லூரிகள் 685-ம் அடங்கும் என்றார் அமைச்சர் பழனியப்பன்.

No comments:

Post a Comment