Pages

Wednesday, April 17, 2013

தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவு வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழ் வளர்ச்சி, இந்து அறநிலைய மற்றும் செய்தி தொடர்புத்துறையில் 16 உதவி பிரிவு அதிகாரி (மொழிபெயர்ப்பு) பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 3–ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு, காலி பணி இடங்களின் எண்ணிக்கை மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 48 விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 26–ந் தேதி அன்று சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் தேர்வர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment