Pages

Thursday, April 25, 2013

திருப்பூரில் 10 இளநிலை உதவியாளருக்கு  பணி நியமனம் உத்தரவு

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 தேர்வில் வெற்றிபெற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை நடந்த கலந்தாய்வு மூலமாக மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளிóல் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவுகளை பெற்றனர்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தொகுதி 4 தேர்வில் வெற்றி பெற்று கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் கலாந்தாய்வு நடைபெற்றது.  

திருப்பூர் மாவட்டத்திற்கான இக்கலந்தாய்வு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் எம்.ஜெயலட்சுமி முன்னிலையில் இக்கலந்தாய்வில் 10 பேர் பங்கேற்றனர்.  திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட, தொடக்க கல்வி அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் 44 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்தனர்.   இந்த 10 பேரில் 8 பேர் தாங்கள் விரும்பிய அரசுப் பள்ளிகளை தேர்வு செய்தனர். ஒருவர் மாவட்ட கல்வி அலுவலகத்திலும், மற்றொருவர் தொடக்கக் கல்வி அலுலகத்தில்(தெற்கு) பணியாற்ற விருப்பம் தெரிவித்து, பணியிடங்களை தேர்வு செய்தனர். கலந்தாய்வில் இவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment