Pages

Wednesday, March 20, 2013

மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு அரசால், 15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், தாமதமாக துவங்கியதால், இந்த கல்வியாண்டு முடியும் நிலையிலும் கூட, இன்னும் பல பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, வரும் கல்வியாண்டில், பள்ளி திறக்கும் போதே அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும், என்பதற்காக, அந்தந்த மாவட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, விலையில்லா பொருட்கள் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியல் அனுப்பும்படி, பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பட்டியல்படி, பள்ளி திறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு, அனைத்து பொருட்களும், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. அவை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, என்றார், கல்வித்துறை அதிகாரி ஒருவர்.

No comments:

Post a Comment