Pages

Sunday, March 31, 2013

ரயிலில் டிக்கெட் முன்பதிவு, தத்கல் கட்டணம் உயர்வு:இன்று முதல் அமல்

  ரயிலில், உயர் வகுப்புடிக்கெட்டுக்கான முன்பதிவுகட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்கூடுதல் கட்டணம் மற்றும் தத்கல்கட்டணம் உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.மத்திய ரயில் பட்ஜட்டில், பயணிகளுக்கான கட்டணம்உயர்த்தப்படாமல், முன்பதிவு, எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் ரயில்,தத்கல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இருப்பினும்,எக்ஸ்பிரஸ் ரயிலில், 2ம் வகுப்பு படுக்கை வசதி, முன்பதிவு கட்டணத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மற்ற, உயர் வகுப்புகளுக்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம், எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல்கட்டணம் மற்றும் தத்கல்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, இன்று முதல்அமலுக்கு வருகிறது.

இதன்படி, முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில்களில் கூடுதல் கட்டணம் மற்றும் தத்கல்கட்டணம் உயர்வு வருமாறு: முன்பதிவு கட்டண உயர்வு விபரம்வகுப்பு கட்டணம்-ரூபாயில் 2ம் வகுப்பு படுக்கை வசதி-20 "ஏசி' சேர் கார்-40 "ஏசி' 3ம் வகுப்பு -40 "ஏசி' 2ம் வகுப்பு -50 "ஏசி' முதல் வகுப்பு-60 எக்ஸ்பிரஸ் ரயில் வகுப்பு கட்டணம்-ரூபாயில் 2ம் வகுப்பு படுக்கை வசதி-30, "ஏசி' சேர் கார்-45, "ஏசி' 3ம் வகுப்பு-45, "ஏசி' 2ம் வகுப்பு -45, "ஏசி' முதல் வகுப்பு-75.

தத்கல் கட்டணம் குறைந்த பட்ச அதிக பட்ச வகுப்பு தத்கல் கட்டணம் , தத்கல் கட்டணம், - ரூபாயில் , - ரூபாயில், 2ம் வகுப்பு படுக்கை வசதி 90 175, "ஏசி' சேர் கார் 100 200, "ஏசி' 3ம் வகுப்பு 250 350, "ஏசி' 2ம் வகுப்பு 300 400, "ஏசி' முதல் வகுப்பு 300 400.

Saturday, March 30, 2013

உண்டு உறைவிட பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கு உத்தரவு

  தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை, வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 25 சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகள், கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக, இயங்கி வருகின்றன. அவற்றில் தங்கி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.

இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் அனைத்தும் வழங்கப்பட்டது. இந்த நிதி ஆண்டில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், ஏப்.,1 முதல், உண்டு. உறைவிட பள்ளிகளை மூடிவிடும்படி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு பயிலும், மாணவர்களை, அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள "ரெகுலர்' பள்ளியில் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ரெகுலர்' பள்ளிகளில் சேர்க்கும் போது, இரவில் தங்க வைக்க முடியாது. "ரெகுலர்' பள்ளி மாணவர்களின், படிப்பு வேகத்துக்கு, மாற்றுதிறனாளி மாணவர்கள் ஈடு கொடுக்க முடியாது. அவர்களை பராமரிக்க உதவியாளர் இன்றி, அவதிப்படும் நிலை ஏற்படும்.

வழக்கமான ஆசிரியர்களே பாடம் நடத்துவதால், மாற்று திறனாளி மாணவர்களின் "சைகை' ஆசிரியர்களுக்கு புரியாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை, அவர்களின் பெற்றோர், காலையில் பள்ளிக்கு அழைத்து வரவும், மாலையில் அழைத்து செல்லவும் முடியாததால், அவர்களின் கல்வி முடங்கும் நிலை உருவாகும், என்றார்.

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

: பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, பள்ளி கல்வித்துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், இன்று நடந்தது. பணிமூப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தி, முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், பணி நியமனம் செய்யப்பட்டனர்.

  ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறையில், 15 முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. முதுநிலை விரிவுரையாளர்களில், பணிமூப்பு தகுதி வாய்ந்த, 15 பேர், முதல்வர்களாக , பதவி உயர்வு செய்யப்பட்டனர். இந்த கலந்தாய்வும், ஆன்-லைன் வழியில் நடந்தது.

பாதிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் அடிப்படையில் மதிப்பெண்

   பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து சேதமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை முடிவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசுப் பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய விடைத் தாள்கள் 3 கட்டுகளாகக் கட்டப்பட்டு விருத்தாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சியில் தேர்வுத் தாள் கட்டுகள் இறக்கும்போது, ஒரு கட்டு காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விருதாச்சலம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விருத்தாச்சலம் ரயில் தண்டவாளத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது விடைத்தாள் கட்டு தண்டவாளத்தில் விழுந்திருப்பதும், சில விடைத் தாள்கள் சிறு, சிறு துண்டுகளாக கிழிந்து சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது.

சேதமடைந்த விடைத் தாள்கள் சனிக்கிழமை சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. அதை அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் வசுந்தரா தேவி கூறியது: தண்டவாளத்தில் விழுந்த கட்டில் 357 விடைத் தாள்கள் இருந்துள்ளன. இதில் குறிப்பிட்ட அளவிலான விடைத் தாள்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது. இவர்கள் எழுதியுள்ள தமிழ் முதல் தாள் விடைத் தாளை அடிப்படையாகக் கொண்டு, சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். ஒருவேளை தமிழ் முதல் தாளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தால் சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கொடுக்கப்படும். எனவே, மாணவர்களும், பெற்றோரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

Thursday, March 28, 2013

43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை:  அமைச்சர் கே.பி. முனுசாமி

் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

  இதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 54,420, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 64,435 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், 16,793 சத்துணவு அமைப்பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்கள், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963, கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்கள், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: மேலும் 22,269 ஆசிரியர்கள், 1091 காவல் உதவி ஆய்வாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042, கூட்டுறவு வங்கிகளில் 3607, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலிப் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணி கழகத்தால் 2,159 டாக்டர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. . மேலும் 43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் அரசின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என்றார் அமைச்சர் முனுசாமி.

தமிழ் இரண்டாம் தாள் : 5 மதிப்பெண்கள் வழங்கப்படும

  தமிழகத்தில் இன்று நடைபெற்ற 10ம் வகுப்புக்கான தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், படிவம் இல்லாமல் இருந்த 38வது கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்புக்கான தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கான வினாத்தாளில், 38வது கேள்வியில், வங்கிப் படிவத்தை நிரப்பவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கான படிவம் வழங்கப்படவில்லை. எனவே, இதனால் தேர்வின் போது மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த கேள்விக்கான பதிலை எழுத முயற்சி செய்திருந்தாலே, மாணவர்களுக்கு முழுதாக 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

Wednesday, March 27, 2013

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

  தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 2012 ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவர்களும், முதலாமாண்டு, இரண்டாமாண்டு தனித்தேர்வர்களாக தேர்வெழுதியவர்களும் மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மார்ச் 30ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தரநிலைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்று, பட்யச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது தபால் முலமாகவோ ஏப்ரல் 4ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம். மேலும் சிறப்பு தேர்வுக்கட்டணம் ரூ.1000ம் செலுத்தி ஜூன் 2012 முதல் மற்றும் இரண்டாமாண்டுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்த்தில் மார்ச் 30ம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 5ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ஜூன் 2012ல் தேர்வெழுதி பெற்ற சான்றிதழின் நகலை கண்டிப்பாக இணைத்து அனுப்ப வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Tuesday, March 26, 2013

ரயிலில் பயணம் செய்ய ஒரு ஆண்டு சீசன் டிக்கெட் : வரும் ஏப்., 1ம் தேதி முதல் அறிமுகம

்  ரயில்களில், சீசன் டிக்கெட்டுகளை ஒரு ஆண்டு வரை வழங்கும் திட்டம், ஏப்ரல் 1 முதல் அமலாகிறது. ரயில்களில் பயணம் செய்வதற்கு, இதுவரை ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இத்துடன், இந்த வசதியில், வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல், சீசன் டிக்கெட் ஆறு மாதங்கள் மற்றும் ஒரு ஆண்டு வரையும் வாங்கிக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதுபோல், இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படும். ரயில்களில் மாணவர்களுக்கான, ஒரு மாதம் மற்றும், 3ம் மாதங்களுக்கான சீசன் டிக்கெட் பழைய நடைமுறையிலேயே வழங்கப்படும்.

ரயில் பயணம் செய்வதற்கு, "இசாட்' வசதியில் வழங்கப்படும் மாதாந்திர சீசன் டிக்கெட் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச ஒரு மாத சீசன் டிக்கெட் வசதியில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

"அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'

  அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே. தங்கவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ். குணசேகரன் ஆகியோர், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பல பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.

அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 58 லட்சத்து 52 ஆயிரத்து 896 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இது தனியார் பள்ளிகளில் படிப்பவர்களைவிட சுமார் 20 லட்சம் அதிகமாகும் என்றார்.   நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 2011-12-ல் 6 லட்சத்து 9 ஆயிரத்து 915 ஆக இருந்தது. 2012-13-ல் இந்த எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் படிப்பதையே இது காட்டுகிறது என்றார்.

ஏப்ரல் 1 முதல் ரயில் கட்டணங்கள் உயர்வு

  ரயில் முன்பதிவு மற்றும் தட்கல் கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளன. சமீபத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. எனினும் முன்பதிவு, ரத்து மற்றும் தட்கல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்தார். இதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. இரண்டாம் வகுப்பு மற்றும் தூங்கும் வசதி ரயில் முன்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.

அதே வேளையில் ஏ.சி., வகுப்பு முன்பதிவு கட்டணங்கள் ரூ. 15 ல் இருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்படுகிறது. சூப்பர் பாஸ்ட் கட்டணங்கள் இரண்டாம் வகுப்பு மற்றும் தூங்கும் வசதி ரயிலுக்கு ரூ. 10 உயர்த்தப்படுகிறது. இது ஏ.சி., வகுப்புகளுக்கு ரூ. 15 முதல் 25 வரை உயர்த்தப்படுகிறது. இதே போல், தட்கல் கட்டணம் இரண்டாம் வகுப்புக்கு ரயில் அடிப்படை கட்டணத்திலிருந்து 10 சதவீதமும், ஏ.சி., வகுப்புக்கு 30 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. முன்பதிவு ரத்து செய்ய வசூலிகக்கப்பட்டு வந்த தொகை தற்போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ரூ. 50ம், ஆர்.ஏ.சி., மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு படுக்கை வசதிக்கு ரூ. 5ம், ஏ.சி., வகுப்பு பயணிகளுக்கு ரூ. 10ம் வசூலிக்கப்படவுள்ளது.

5000 பேர் கொண்ட பறக்கும் படை தயார் 10ம் வகுப்பு தேர்வுகள் நாளை தொடக்கம்

  பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன. அதே நாளில் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன. இந்த ஆண்டு 10ம் வகுப்பில் 11 லட்சம் மாணவ மாணவி யர் தேர்வு எழுதுவார்கள். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங் கின. நாளையுடன் இந்த தேர்வுகள் முடிகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடியும் அதே நாளான 27ம் தேதியே பத்தாம் வகுப்புக் கான தேர்வுகளும் தொடங் குகின்றன. தமிழகம் புதுச் சேரியை சேர்ந்த 10312 பள்ளிகளை சேர்ந்த சுமார் 11 லட்சம் மாணவ மாணவி யர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களுக்காக 3050 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 84000 தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். கடந்த ஆண்டுடன் பழைய பாடத்திட்டம் முடிவுக்கு வந்ததால், மேற்கண்ட அளவுக்கு அதிகமாக தனித் தேர்வர்கள் எழுத வேண்டி இருந்தது. ஆனால்  இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனித் தேர்வர்கள் அளவு இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு கள் காலை 10 மணிக்கு தொடங்கும். கேள்வித் தாளை படித்துப் பார்க்க 10 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.

விடைத்தாளில் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. இதையடுத்து 10.15 மணிக்கு விடைகள் எழுதத் தொடங்கி மதியம் 12.45க்கு தேர்வை முடிக்க வேண் டும். மின் தட்டுப்பாடு காரணமாக அனைத்து தேர்வு மையங்களிலும் ஜெனரேட்டர் பொருத்த தேர்வுத் துறை உத்தர விட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க 5000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது. முறைகேடு களில ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடி யாத அளவுக்கு தேர்வுத் துறை நடவடிக்கை எடுக் கும். ஆள் மாறாட்டம் போன்ற குழப்பங்களை செய்யாமல் இருக்க போட் டோவுடன் கூடிய ஹால் டிக்கெட் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. தேர்வு மையத்திலும் போட்டோவுடன் கூடிய வருகைப் பதிவேடு வைக் கப்பட்டு மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்படும். நாளை தொடங்கும் 10ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 12ம் தேதியுடன் முடிகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்வித்துறையினர் ஆலோசனை

  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். நஞ்சப்பா பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார்.

தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் காலை 8.15 மணிக்குள், தேர்வு மையத்துக்கு சென்றுவிட வேண்டும். தேர்வு மையமான பள்ளி வளாகம், தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்; தேர்வறைகள் மிக சுத்தமாக இருக்க வேண்டும். தேர்வறைகளின் மாதிரி விளக்கப்படம், பள்ளி வளாக முன்பகுதியில் எண்கள் குறிப்பிட்டு, மாணவர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். குடிநீர் வசதி அவசியம் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர் பாதிப்படையும் வகையில், யாரும் செயல்படக் கூடாது, என, ஆலோசனை வழங்கப்பட்டது.

Saturday, March 23, 2013

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் கணித வினா எப்படி இருக்கும்?

   மாணவர்கள் குழப்பத்தை போக்குவதற்காக 10ம் வகுப்பு புதிய கணித வினா அமைப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கமாக தெரிவிக்கும்படி பள்ளிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.10ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கணித வினாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வராமல் இருந்ததால் வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற குழப்பமும், அச்சமும் மாணவர்கள் மத்தியில் இருந்தது. இதை தவிர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் புதிய மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதிய வினாத் திட்டப்படி ஏ பிரிவில் கேட்கப்படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் 15 வினாக்கள் புத்தகத்தில் எடுத்துக்காட்டு வினா மற்றும் புத்தக வினாவில் இருந்தே கேட்கப்படும். இதுபோல் பி பிரிவில் 2 மதிப்பெண் வினாவில் கிரியேட்டிவ் வினாவாகவும், கட்டாய வினாவாக இருந்த 30வது வினா இப்போது புத்தகத்தில் உள்ள வினாவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பதில் வினா எண் 16 முதல் 29 வரை உள்ள இரு மதிப்பெண் வினாக்களில் 2 வினாக்கள் கிரியேட்டிவ் வினாவாக கேட்கப்படும். சி பிரிவில் கட்டாய கிரியேட்டிவ் வினாவாக இருந்த கேள்வி எண் 45 இனி புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். அதற்குப் பதில் 31 முதல் 44 வரை உள்ள வினாக்களில் 2 வினாக்கள் கிரியேட்டிவ் வினாவாக கேட்கப்படும்.

கடந்த ஆண்டு மெய்யெண்கள், இயற்கணிதம், ஆயத்தொலைவுகள், அளவியல் பாடங்களில் இருந்து மட்டுமே கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இப்போது அனைத்துப் பாடங்களில் இருந்தும் கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த விளக்கங்கள் கல்வித்துறையால் அளிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வினா வடிவமைப்பு முறையால் கணிதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதுபோல் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கையில் இம்முறை அதிகரிக்கும் என கல்வித் துறையால் எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, March 22, 2013

25-ல் அண்ணாமலை பல்கலைத் தேர்வு முடிவுகள் வெளியீ

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச் 25-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார். இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in,  www.schools9.com  ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359. மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட முடிவுகள்: பி.லிட்., பி.ஏ. தமிழ்., பி.காம், பிஎல்ஐஎஸ்.,பி.எம்.எம். பி.பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.எஸ்சி. யோகா, எம்.எல்.ஐ.எஸ்., மற்றும் பிஜி டிப்ளமோ, டிப்ளமோ வகுப்புகள்.