Pages

Thursday, January 24, 2013

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலைத்திறன் போட்டி

  மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.1ம் தேதியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் பிப்.2ம் தேதியும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது. கவிதை போட்டி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது. கட்டுரைப்போட்டி பகல் 12 மணி முதல் பகல் 1.30 மணிவரை நடக்கிறது. பேச்சு போட்டி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. விதிமுறை:

அந்தந்த மாவட்டத்திலுள்ள கலைக்கல்லூரிகள், பொறியிற் கல்லூரிகள், மருத்துவம், கால்நடை மருத்துவக்கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், பல் தொழில் நுட்பக் கல்லூரிகள், பிற கல்லூரிகளில் பியலும் மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். அனைத்து மாணவர்களுக்கும் போட்டி பொதுவானது. ஒவ்வொரு கல்லூரி, பள்ளிகளிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் 3 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இவர்களை கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், பற்றிய விபரத்தை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, மாணவரே பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்று போட்டி நடப்பதற்கு முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரிடம் தரவேண்டும்.

மூன்று போட்டிகளில் ஒரு மாணவரே கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிக்கான இடம், நாள், நேரம் தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து பின்னர் அறிவிக்கப்படும். சிறந்த கவிதைக்கு, முதல் பரிசு ரூபாய் 10ஆயிரம், 2ம் பரிசு ரூபாய்7 ஆயிரம். கட்டுரைக்கு, முதல் பரிசு ரூபாய்10 ஆயிரம், 2வது பரிசு ரூபாய்7 ஆயிரம். பேச்சுபோட்டிக்கு, முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 2வது பரிசு ரூபாய்7 ஆயிரம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment