Pages

Monday, December 03, 2012

25 ஆண்டுகள் பணி நிறைவு பொதுத்துறை ஊழியர்களுக்கும் பணப்பரி”

அரசுப் பணியில், 25 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்களின் பணியாளர்களுக்கும், நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப்பணியில், 25 ஆண்டுகள், எவ்வித குறையும் இல்லாமல் பணியாற்றியவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், பாராட்டுச் சான்றிதழும், "கிசான் விகாஸ்' பத்திரமும் வழங்கப்பட்டு வந்தது. கிசான் விகாஸ் பத்திரம் வழங்குவதை சமீபத்தில், மத்திய அரசு நிறுத்தியது. இதையடுத்து, கிசான் விகாஸ் பத்திரத்திற்குப் பதில், 2000 ரூபாய் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆண்டுக்கு இருமுறை, இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் கீழ் வரும், அரசுக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், இத்திட்டத்தை நீட்டித்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment