Pages

Saturday, November 17, 2012

பள்ளி வாகனங்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (நவம்பர் 19) பள்ளி வாகனங்கள் ஓடாது என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விபத்துகளைத் தவிர்ப்பதற்காக பள்ளி வாகனங்களுக்கு 21 புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்த 21 விதிமுறைகளில் 8 விதிமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமில்லை. எனவே இந்த 8 விதிமுறைகளை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறினார்.

No comments:

Post a Comment