Pages

Thursday, November 15, 2012

பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைப்பு!

   பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய்  குறைக்கப்படுவதாகவும்,இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு  வருவதாகவும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இந்த விலை குறைப்பை தொடர்ந்து சென்னை மற்றும் மும்பையில் பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ.1.20 ஆக குறைக்கப்படும்.கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ. 1.19  ம்,டெல்லியில் 95 காசுகளும் குறைக்கப்படும். அதே சமயம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் ரூ. 1.25 குறைக்கப்படும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப, இந்திய  எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும்,15 தினங்களுக்கு ஒருமுறை பெட்ரோல்  விலையை மாற்றியமைத்து வருகின்றன். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால்,இந்த  விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment