Pages

Saturday, October 27, 2012

வருவாய் திறன் உதவித்தொகை தேர்வு:விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் டிச.,30 ல் நடக்க இருக்கும் தேசிய வருவாய் திறன் உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வு நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில் (www.dge.tn.nic.in) பதவியிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவ.,9 க்குள், தலைமை ஆசிரியர்களிடம் தேர்வு கட்டணம் ரூ.50 செலுத்தி, பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2011-12 கல்வியாண்டில், 7 ம் வகுப்பு தேர்வில், எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீதம், பிற மாணவர்கள் 55 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் உதவித்தொகை மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தற்போது, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். பூர்த்தி செய்து வாங்கிய விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நவ.,12 க்குள், முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment