Pages

Tuesday, September 04, 2012

ஆசிரியர் தினம்: ஆளுநர் வாழ்த்து

  ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ரோசய்யா ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான ஆசிரியர் தினத்தில், ஆசிரியர் சமுதாயத்திற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், தொலைநோக்கு பார்வை உடையவர். ஆழ்ந்து படித்த கல்விறிவு கொண்டவர். சிறந்த குரு மற்றும் ராஜதந்திரி ஆவார். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த அவர் நாட்டின் உயரிய பதவிக்கு உயர்ந்தவர்.

ஆசிரியர்களுக்கு முன்னேற்றகரமான மனப்பாங்கு அவசியம். அவர்கள் அறிவுக் களஞ்சியமாக மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு முன் மாதிரியாகவும் திகழ வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பவராகவும், நண்பராகவும், தத்துவஞானியாகவும், நல்வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். மேலும்,  இன்றைய மாணவர்களை தைரியமிக்க, புதுமைகளை விரும்பக் கூடிய, நன்னடத்தை மற்றும் நற்குணமிக்க நாளைய இளைஞர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.

நாளைய சமுதாயத்தை உருவாக்கும் அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு நாம் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். இன்றைய நமது உயர்ந்த நிலைக்கு காரணமான ஆசிரியர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்வோம் என்றார் ஆளுநர்.

No comments:

Post a Comment