Pages

Thursday, September 27, 2012

தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக பணியாற்றி வந்த பூஜா குல்கர்னி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் கபூர் தொழில்துறை முதன்மை செயலாளராகவும், பி. செந்தில் குமார் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சிறப்பு செயலாளராகவும், ஜே. ராதாகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராகவும், ஜி. பிரகாஷ், வேலை வாய்ப்பு மற்றும் பயிட்றசித் துறை இயக்குநராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

என். மதிவாணன் தொழில்துறை கூடுதல் செயலாளராகவும், மகேசன் காசிராஜன் தமிழ்நாடு சர்க்கரை வாரியத்தின் இயக்குநராகவும், ஜோதி நிர்மலா தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயலாளராகவும், வி.எம். சேவியர் கிறிஸோ நாயகம் சமூக நலத்துறையின் இயக்குநராகவும், வி. மோகன்ரர்ஜ், போக்குவரத்துத் துறை துணை செயலாளராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனில் மேஷ்ராம் வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண்மை வணிகத்தின் இயக்குநராகவும், ஜே. சந்திரகுமார் நில சிரமைப்புத் துறை இயக்குநராகவும், எம். பாலாஜி மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலாளராகவும், ஹன்ஸ் ராஜ் வர்மா சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் முதன்மை செயலாளராகவும் பணிமாற்றம் பெறுகின்றனர்.

குமார் ஜெயந்த் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சமூகத்தின் திட்ட இயக்குநராகவும், ஏ. சட்டரஞ்சன் மோகன்தாஸ் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளராகவும் பணிமாற்றம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment