Pages

Wednesday, August 08, 2012

TN Govt Holiday

  தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை-09-08-2012 எழுத்தின் அளவு : Print Email சென்னை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி மாதம், அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தை கணக்கிட்டு, அடுத்த மாதம், 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையொட்டி, அரசு விடுமுறையும் அடுத்த மாதம், 8ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, கிருஷ்ண ஜெயந்தி இம்மாதம், 9ம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, "தினமலர்&' நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை மாற்றி, செப்டம்பர், 8ம் தேதிக்கு பதில், இன்று, 9ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என, தனது வாழ்த்துச் செய்தியில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்

No comments:

Post a Comment