Pages

Wednesday, August 22, 2012

தமிழகத்தில் நடந்த ஜாதி, பொருளாதாரக் கணக்கெடுப்பில், ஜாதி தவிர, மற்ற விவரங்களை வெளியிட, பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு

தமிழகத்தில் நடந்த ஜாதி, பொருளாதாரக் கணக்கெடுப்பில், ஜாதி தவிர, மற்ற விவரங்களை வெளியிட, பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜாதி, பொருளாதாரக் கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும், அவர்களது ஜாதி, வருமானம், வேலை, வாகனங்கள், வீடு, மொபைல், தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விடுபட்டவர்களும், இதில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் விவரங்கள் அனைத்தும், மாவட்டம் தோறும், "டேப்லட்' கம்ப்யூட்டரில் பதிவு செய்து, ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்களும், சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதை விரைந்து முடிக்கவும், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, சேகரிக்கப்பட்ட விவரங்களில், ஜாதி தவிர மற்ற விவரங்களை, வெளியிடலாமா என, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதற்கென, பிரத்யேக விண்ணப்பங்களும், அரசால் வழங்கப்பட்டு உள்ளன. ஆட்சேபனைகளை, 15 நாட்களுக்குள் பெற்று, செப்., 10க்குள் வெளியிடவும், அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment