மொத்தமுள்ள 1,75,000 இடங்களுக்கு 1,70,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இன்று மாலையுடன் முடிவடைந்த கவுன்சிலிங்கில் 1,20,000 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு கல்லூரிகளில் சேர்ந்தனர். சுமார் 55 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. இதனை தொடர்ந்து துணை கவுன்சிலிங் வரும் 21ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. கவுன்சிலிங்கில் மெக்கானிக்கல் பிரிவில் சுமார் 26 ஆயிரம் மாணவர்களும், இ.சி.இ., பிரிவில் 24 ஆயிரம் மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 14 ஆயிரம் மாணவர்களும், சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 13 ஆயிரம் மாணவர்களும், இ.இ.இ., பிரிவில் 12 ஆயிரம் மாணவர்களும், ஐ.டி.,யில் 8 ஆயிரம் மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment