Pages

Tuesday, August 28, 2012

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆறு ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் சம்பளம், "கட்' செய்யப்பட்டது

. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில், நேற்று முன்தினம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன், திடீர் ஆய்வு நடத்தினார். காலை, 9.30மணிக்கு, எடப்பாடி அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்றார். அப்போது, இறை வணக்கம் கூட்டம் நடக்கவில்லை. ஆசிரியர்களும் பணியில் இல்லை. மிகவும் தாமதமாக வந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், தாமதமாக பள்ளிக்கு வந்த இடைநிலை ஆசிரியர் குணசேகரன், பட்டதாரி ஆசிரியர் திருமுருகன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். காலை, 11 மணிக்கு, கணேசபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில், ஆய்வு நடத்தினார். விடுமுறை விண்ணப்பம் அளிக்காமல், முன் அனுமதியும் பெறாமல், கையெழுத்திடாமல், வருகைப் பதிவேடு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்கவும், பட்டதாரி ஆசிரியர் சுதா, இடைநிலை ஆசிரியர் செல்வராணி, வேலவன் ஆகியோரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment