பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் :
தமிழக அரசுக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருவாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பு பிளீடர் வெங்கடேசன் கூறுகையில் : பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. அமைச்சரவையில் ஒப்புதல் பெற்ற பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய 1 வாரம் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment