எஸ்சி., எஸ்டி., ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் சாதகமான தீர்வு காண, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் இதனை தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை எட்டுவதற்கு அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குமாறும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளையும் கேட்டுக்கொண்டார். அரசுப் பணிகளில் எஸ்சி.,-எஸ்டி ஊழியர்களின் நலனை காக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், அதற்காக சட்டப்படி செல்லத்தக்க அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்தார். எனினும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எஸ்சி., எஸ்டி., பிரிவு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க உத்திரபிரதேச அரசு மேற்கொண்ட முடிவுக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தின. இதையடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
Pages
▼
No comments:
Post a Comment