்
தேசிய திறனாய்வு தேர்வு (செட்), பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழகம் அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு நடத்த இருக்கின்றது. தகுதி: இத்தேர்வுக்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதுகலை பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களும், (எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களும்) பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுகள் மூன்று தாள்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. முதல் தாள் 100 மதிப்பெண்கள் காலை 9.30 முதல் 10.45 வரையும், இரண்டாம் தாள் 100 மதிப்பெண்கள், காலை 10.45 முதல் பிற்பகல் 12.00 வரையும், மூன்றாம் தாள் 150 மதிப்பெண்கள், பிற்பகல் 1.30 முதல் மாலை 4.00 மணி வரையும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment