Pages

Thursday, August 23, 2012

எஸ்.எம்.எஸ் உச்ச வரம்பு 20ஆக உயர்வு

அசாம் கலவரத்தை தொடர்ந்து தென் மாவட்டங்களில் வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என வதந்தி கிளப்பிய எஸ்.எம்.எஸ்.கள் காரணமாக, எஸ்.எம்.எஸ் அனுப்புவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி அடுத்த 15 நாட்களுக்கு ஒரு எண்ணிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும் எனக் கூறப்பட்டது.   இந்தக் கட்டுப்பாடு அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது வதந்திகள் பரப்புவது முழுமையாக தடுக்கப்பட்டு விட்டதால் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எனவே ஒரு எண்ணிலிருந்து நாள் ஒன்றுக்கு 20 எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பலாம் எனவும், இந்த விதி உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.   அசாம் கலவரம் காரணமாக வேறு மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டதால் ஏற்பட்ட பீதியால், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து பெரும்பாலான வடகிழக்கு மாநில மக்கள் சொந்த ஊர் திரும்பினர். வடகிழக்கு மாநில மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அந்த எஸ்.எம்.எஸ்.கள் காரணமாகவே, எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment