Pages

Sunday, August 12, 2012

2ம் கட்ட இன்ஜி. கவுன்சிலிங்: 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம

் பொறியியல் சேர்க்கை, இரண்டாவது கட்ட கலந்தாய்வுக்கு, 16ம் தேதி வரை மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலை நடத்தி வரும் பொறியியல் சேர்க்கையில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதனால், இரண்டாவது கட்ட கலந்தாய்வை நடத்தி, மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டது. பல்கலையில், 16ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவினர் 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர் 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பத்தைப் பெறலாம். உரிய சான்றிதழ்களுடன், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 16ம் தேதி மாலை 5:30க்குள், அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கான கலந்தாய்வு தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment