Pages

Thursday, August 23, 2012

வாக்காளர் பட்டியலில் மாற்றமா "டோல் ப்ரீ எண் 1950' அழைக்கலாம் : *தேர்தல் கமிஷன

் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்க,திருத்தம் செய்ய, இலவச போன் எண்-"1950'ல் தொடர்பு கொள்ளலாம்,'' என,தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 2013 ஜனவரியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க,தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மாவட்டங்களில் ஓட்டுச்சாவடி வாரியாக செயல்படும், "ஓட்டுச்சாவடி அலுவலர்கள்' வீடு வீடாக சென்று வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். "டோல் ப்ரீ எண்': ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வர உள்ள நிலையில்,தேர்தல் கமிஷன் இலவச போன் எண்-1950 ஐ வழங்கியுள்ளது. இதில், அழைத்தால், தகவல் தருவோரின் மாவட்டம், தொகுதி, ஓட்டுச்சாவடி போன்ற விபரங்களை தேர்தல் கமிஷன் சேகரிக்கும். அத்தகவலை, அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பும். அதற்கு பின், போன் செய்தவர்களின் வீட்டிற்கே சென்று, சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும், என,தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment