இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, July 03, 2015

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் வழங்குவதில் சிக்கல்

மத்திய அரசு அனுமதி கிடைக்காததால், தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்குவதில், இரண்டாவது ஆண்டாக சிக்கல் நீடிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு, அட்லஸ் என்ற, உலக வரைபட புத்தகம், அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். ஆனால், கடந்த கல்வியாண்டு முதல், அரசு சார்பில், அட்லஸ் புத்தகம் வழங்குவதை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அட்லஸ் வரைபடப் புத்தகம் அச்சடிக்க, மத்திய அரசின், 'சர்வே ஆப் இந்தியா' அமைப்பின் அனுமதி வேண்டும். அதிகாரபூர்வ வரைபடத்தை, அந்த அமைப்பில் பெற்ற பின்னரே, அச்சடித்து வழங்க முடியும்.கடந்த ஆண்டு, ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா உருவாக்கப்பட்டதால், வரைபடத்தில் திருத்தம் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.

அதேபோல், சீன எல்லைப் பகுதியிலுள்ள சில இடங்கள் குறித்தும், தெளிவான படங்கள் உருவாக்கப்படுவதால், புதிய வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் படங்களையும், திருத்தப்பட்ட மாநில வரைபடங்களையும் அதிகாரபூர்வமாக வழங்கி, அனுமதி அளித்தால் தான், புதிய புத்தகம் தயாரிக்க முடியும். எனவே, அனுமதிக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

9ம் வகுப்பு ப்ளஸ் 1 பாடங்களை புறக்கணிக்க தலைமையாசிரியர்கள் முடிவு

நடப்பு கல்வியாண்டின் துவக்கம் முதலே, தேர்ச்சி விகிதத்துக்காக ஆசிரியர்கள் விரட்டப்படுவதால், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை, இம்மாதத்துடன் நிறுத்திவிட்டு, பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்த, பெரும்பாலான, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கெடுபிடி நடவடிக்கை:தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி, 100 சதவீதமாக இருக்க வேண்டும் என, வலியுறுத்தி, காலாண்டு தேர்வு முதல், ஆசிரியர்களிடமும், பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் கெடுபிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 'ஸ்லோ லேர்னர்' பிரிக்கப்பட்டு, சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டன.

தேர்ச்சி விகிதம் குறைந்தால், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்யப்பட்டதால், அனைவரின் கவனமும், 'ஸ்லோ லேர்னராக' இருந்த, மாணவர்களின் மீதே இருந்தது. கஷ்டப்பட்டு படித்தும், தேர்ச்சி பெற இயலாத மாணவர்களை, இடைநிறுத்தம் செய்யவும், பல பள்ளிகளில் தில்லுமுல்லு வேலைகள் நடந்தன. இருப்பினும், கடந்த ஆண்டில், அரசு பள்ளிகளில், எதிர்பார்த்த அளவுக்கு, தேர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. சனிக் கிழமைகளில்...இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு துவக்கம் முதலே, தலைமை ஆசிரியர்களிடம் கெடுபிடி துவங்கியுள்ளது. இந்த ஆண்டும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக வைத்து, தினமும், காலை, மாலை மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த துவங்கிஉள்ளனர்.

கடந்த ஆண்டுகளில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்காமல் இருந்த, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அதில், 'டோஸ்' விடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, தேர்ச்சி விகிதம் வேண்டும் என, வலியுறுத்துவதால், அப்பள்ளிகளை பின்பற்றி, பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்களை, புறக்கணிக்க, அரசு பள்ளிகளும் முடிவு செய்துள்ளன.இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில், பெரும்பாலானோர், ஆசிரியர்களுக்கு கட்டுப்படுவதில்லை. அதிக கட்டுப்பாடு விதித்தாலும், பள்ளிக்கு வருவதில்லை. பெற்றோரும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. இதனால், அவர்களை இடைநில்லாமல், படிக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தினமும், இரு வேளை, 'டெஸ்ட்' என, வைத்தால், பள்ளிக்கு மாணவர்கள் வருவதில்லை. நிர்ப்பந்தம்:இருப்பினும், தனியார் பள்ளிகளை ஒப்பிட்டு, தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என, கல்வித்துறை அலுவலர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை நடத்துவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு, 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 பாடங்களையே நடத்தி, தேர்வு வைத்து, மனப்பாடம் செய்ய வைக்கின்றனர். அதே முறையை, அரசு பள்ளிகளிலும் செய்ய பல தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வலியுறுத்தும், கல்வித்துறை அலுவலர்களால், அரசு பள்ளிகளில் தனித்தன்மை இழந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

English writing

Click below

https://drive.google.com/open?id=0B2hOevrFvSUSQkhTV1dacDkwZ28

English reading

Click below

https://drive.google.com/open?id=0B2hOevrFvSUSTjJHQXJsdGZ4X2s

SSA-PERIODIC ASSESSMENT TOOL-TAMIL,ENGLISH&MATHS (CLASS-1 TO 8)

Click below

https://drive.google.com/open?id=0B2hOevrFvSUSOTFrZHQtOG5ydVE

PRIMARY CRC 11-7-15

Thursday, July 02, 2015

இந்த ஆண்டு இறுதிக்குள் ப்ளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழுக் கூட்டம் சென்னை ரிசர்வ் வங்கியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன், துணை ஆளுநர்கள் ஆர்.காந்தி, எச்.ஆர்.கான், எஸ்.எஸ்.முந்த்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன் கூறியதாவது: இந்திய ரிசர்வ் வங்கி, முக்கிய நகரங்களில் அதிகாரிகளின் குழுக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

இதில் பொருளாதாரம், மூலதன முதலீடு, எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தம் தேவை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தியப் பொருளாதாரம், வளர்ச்சிப் பாதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள் நாட்டு முதலீடு அதிகரிக்கும் அறிகுறிகளின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். பண வீக்கம் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இதைக் கட்டுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, வங்கிகளுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு பருவமழை சராசரி அளவுக்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், தற்போது வரை வழக்கமான அளவுக்கு பருவமழை பெய்துள்ளது. எனினும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து, பருவ மழையின் அளவை பொருத்துதான் வட்டி விகிதம் குறைப்பது பற்றி முடிவு செய்யப்படும். இந்தியாவுக்குப் பாதிப்பு இல்லை: மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில், ரிசர்வ் வங்கி முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், இந்தியாவுக்கு நேரடியாக எந்தவிதப் பாதிப்பும் இருக்காது.

இருப்பினும், மறைமுக பாதிப்புகள் அதிகம் இருக்கும். அதாவது, அந்நிய செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றமே இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பண மதிப்பானது, ஐரோப்பிய நாட்டு பணத்துடன் ஒப்பிடும் போது, ஏற்றம், இறக்கமாகவே உள்ளது. நாட்டின் பண மதிப்பு ஏற்றம், இறக்கமாக இருக்கக் கூடாது. இந்தியர்கள் அனைவரையும், வங்கி சேவை போன்ற நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக, ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. குழுவில் வல்லுநர்கள்,அரசு பிரதிநிதிகள் இடம் பெறுவர். இந்தக் குழுவானது, அடுத்த 5 ஆண்டுக்குள் மக்களை எப்படி நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவது என்பது குறித்து வரைவு திட்டம் தயாரித்து அளிக்கும். தனி விதிமுறை:

வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் தனியாக விதிமுறை ஒன்று கொண்டு வரப்படும். அதேபோல் மத்திய அரசு, மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, செல்லிடப்பேசி மூலம் மேற்கொள்ளப்படும் வங்கி சேவையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சோதனை முயற்சியாக, நாட்டின் ஒரு சில மாநிலங்களில் பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. நிகழாண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார் ரகுராம் ஜி.ராஜன்.

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க 60ஆசிரியர்களுக்கு பயிற்சி

பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 4.9 சதவீதம் குறைவாக இருந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகளைவிட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 5.9 சதவீதம் குறைவாகவே இருந்தது.

எனவே, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சியை வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 10-ஆம் வகுப்புக்கு பாடம் நடத்தும் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அந்தப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இரு பாலரும் படிக்கும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது. மகளிர் மட்டும் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது தேர்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு பயிற்சியின்போது, கடந்த சில ஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பொதுத் தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின் பிரதிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அதோடு, அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லை. எனவே, இந்தப் பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக ஆசிரியர்களுக்கு தனியான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருந்தது என அவர்களிடம் ஆய்வும் நடத்தப்பட உள்ளது. அதோடு, இந்தப் பயிற்சியில் அவர்கள் என்ன தெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக பயிற்சி அட்டைகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இதேபோன்று சிறப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கூகுள் மேப்பில் வாக்குச்சாவடிகள் இணைக்கும் பணி தொடக்கம்

கூகுள் மேப்பில் வாக்குச்சாவடிகளை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர் களுக்கு வாக்குச்சாவடி அமைவிடம், போட்டோ, பஸ் வழித்தடத்துடன் கூடிய 'பூத்சிலிப்' வழங்கப்படவுள்ளது.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் 'ஆன்லைனில்' இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் ஆதார், அலைபேசி எண்கள் இணைக்கும் பணி நடக்கிறது. வாக்குச்சாவடிகளையும் 'கூகுள்மேப்பில்' இணைக்கும் பணி துவங்கியுள்ளது.

வாக்குச்சாவடியின் போட்டோ, அமைவிடம், வாக்குச்சாவடிக்கு செல்லும் வழித்தடம் உட்பட அனைத்து விபரங்களும் 'கூகுள்மேப்பில்' இணைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ள பூத்சிலிப் களில், அவர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியின் அமைவிடம், ஓட்டுச்சாவடி போட்டோ, அதற்கு செல்லும் வழி, பஸ் வழித்தடம் உட்பட அனைத்து விபரங்களும் அச்சிட்டு வழங்கப்படவுள்ளது, என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையதள மின் கட்டண சேவை நிறுத்தம்

தமிழ்நாடு மின் வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பு: மின் வாரிய இணையதள சேவை, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக, வரும், 4ம் தேதி மாலை, 3:00 மணி முதல், 5ம் தேதி மாலை, 3:00 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த நேரத்தில், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துதல், மின் கட்டண விவரம் அறிதல் மற்றும், 'டெண்டர்' தொடர்பான விவரங்களைப் பெற முடியாது. எனவே, 4ம் தேதிக்கு முன், நுகர்வோர், தங்களின் மின் கட்டணத்தைச் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கலுக்கு தயாராகிறது புதிய படிவம்

வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நிதி ஆண்டான, 2014 - 15 க்கான, விரிவான கணக்கை தாக்கல் செய்யும் காலம், ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே இருந்த படிவம், தற்போது எளிமையாக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற தகவல்கள் என, சில நீக்கப்பட்டு, படிவத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளது. புதிய தகவல்கள் சில சேர்க்கப்பட்டும், படிவம் தயார் செய்யப்பட்டது.

ஆனால், புதிய தகவல்கள் சிலவற்றுக்கு, கணக்கு கொடுப்பது கடினம் என, கருத்து பெறப்பட்டது. இதனால், புதிய படிவத்தில் மாற்றங்கள் செய்து, மீண்டும் படிவம் தயார் செய்யப்படுகிறது. படிவம் முழுமையாகத் தயார் செய்து வருவதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதனால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஆகஸ்ட் வரை, நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், 'ஆன் - லைன்' மூலம் கணக்கை தாக்கல் செய்யவது கட்டாயம். அதற்கு கீழ் உள்ளவர்களே, படிவம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்.

எனவே, புதிய படிவம் உருவாக்குவதன் மூலம், கணக்கை தாக்கல் செய்வதில் சிக்கல் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். ஆகஸ்டு வரை கால நீட்டிப்பு மத்திய அரசின் புதிய கொள்கைப்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்களை எளிமைப்படுத்தியும், புதிய தகவல்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. புதிய தகவல் சேர்ப்பின் கீழ், வருமான வரி செலுத்துவோர், ஆண்டுதோறும், அவர்கள் சென்ற வெளிநாட்டு விவரம், அதற்கான செலவுகளை, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் தெரிவிக்க வேண்டும். 'இப்புதிய அணுகுமுறை தேவையற்றது. வெளிநாட்டில் எவ்வளவு செலவு செய்தோம்; எதற்கு செலவு செய்தோம் என்ற விவரங்களை தெரிவிப்பது கடினம்' என, பொதுமக்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு, 'பாஸ்போர்ட் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதனால், புதிய படிவம் உருவாக்குவதற்கும், அதை வினியோகித்து, கணக்குகளைப் பெறவும், ஆகஸ்ட் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

25% தனியார் பள்ளி சேர்க்கை காலியாக உள்ள இடங்களின் விபரம் இணையத்தில் வெளியீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய உரிமைச்சட்டம் 2009ன்படி, 25சதவிகிதம் ஏழைமாணவர்கள் சேர்கை விவகாரத்தில், தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் விவரம். tnmatricschools.comஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று இலவச கட்டாயக்கல்வி சட்ட மாநில முதன்மை தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரிவு12(1)(c)இன் கீழ் 25% இடஒதுக்கீட்டில் 30.06.2015 நிலவரப்படி காலியாக உள்ள இடங்களின் பட்டியல் பள்ளிவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்கள் 30.11.2015 வரை காலியாக வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பெற்றோர்கள் நேரடியாக பள்ளி நிர்வாகத்திடமோ, அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் அலுவலம், மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் உள்பட ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் அளித்து சேர்க்கை செய்யலாம். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுதியிருப்பின் உடனடி சேர்க்கை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 01, 2015

Eco club

Click below

https://app.box.com/s/thaab0w14htzjzzajtk9g83zfi199lqq

தமிழகம் முழிவதும் மூன்றாண்டுகளில் 400 ஆசிரியர்பயிற்சி நிறுவனம் மூடல்

தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள், 40 அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள், 746 தனியார் ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 816 ஆசிரியர் பட்டய பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆரம்பப்பள்ளிகளில் சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவகளை நியமனம் செய்தது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அவர்கள் பாடம் நடத்தநியமிக்கப்பட்டனர். இதனால் ஏராளமான ஆசிரியர்கள் தேவைப்பட்டனர்.

குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிகம் நியமிக்கப்பட்டதால் பெண்கள் அதிகளவில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படித்தனர். இதனால் தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சி பள்ளியை துவக்க அனுமதியளிக்கப்பட்டது. தற்போது நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. அரசு ஆரம்பப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 3 வயது முடிவதற்கு முன்பே தனியார் “பிளே’ ஸ்கூலில் சேர்க்கின்றனர். இதைத் தொடர்ந்து மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி என தனியார் ஆங்கில வழிப்பள்ளிகளில் கல்வியை தொடரும் நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் அரசு ஆரம்பப்பள்ளிகளுக்கு வருவது வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் தமிழக அரசு இதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தவர்கள் 5ம் வகுப்புக்கு மேல் பாடம் நடத்தக்கூடாது என உத்தரவை போட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களும் கணிசமாக குறைந்து விட்டது. வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தாலும், தனியார் கல்வி நிறுவனங்கள் ஏராளமாக வந்து விட்டதாலும் போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவ- மாணவிகள் சேர்க்கை இன்றி 400 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. கடந்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு, இதுவரை ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் பெரும்பாலானோருக்கு ஆசிரியர் பயிற்சி படித்தால், இந்த ஜென்மத்திற்கும் வேலை கிடைக்காது என்ற எண்ணம் வந்துள்ளது. எனவே பெரும்பாலான மாணவர்கள் பிளஸ்2 முடித்ததும் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளை படிக்க விருப்பப்படுகின்றனர். சிலர் ஆராய்ச்சி படிப்புகளில் சேருகின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் ஆசிரியர் பயிற்சி படிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய் விட்டது. அனைத்து அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சியை படிக்க வைத்து, மேல் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து, ஆசிரியர் பணிக்கு சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் ஏழை, எளிய மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு எப்போது அரசு வேலை கிடைக்குமோ, அப்பொழுது கிடைக் கட்டும். அது வரை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லட்டும் என்று நினைத்து, காலத்தை போக்கி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை குறைய தொடங்கியது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியாமல் மூடும் அபாயத் தில் உள்ளனர்.

கட லூர் மாவட்டத்தில் அதே போன்று 10 பள்ளிகளில் முதலாமாண்டு சேர்க்கையே இல்லாமல் உள்ளது. இரண்டாமாண்டு மாணவர்கள் மட்டுமே படித்தனர். இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. நடப்பு ஆண்டிற்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங் முடிந்த பின்னர் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கை குறித்து தெரியவரும். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் பல ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களின் மூடு விழா நடத்த தயாராக உள்ளன.