இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, June 11, 2015

டாக்டர்கள் இனி மருந்து சீட்டில் கிறுக்க முடியாது

நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி படிக்கக்கூடிய வகையில் தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுதுவது கட்டாயமாகிறது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டில், மருத்துவர்கள் இனி தங்களது இஷ்டம் போல் கிறுக்க முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் கீழ், இதற்கென, அரசிதழில் அறிவிப்பை சுகாதார அமைச்சகம் மிக விரைவில் வெளியிட உள்ளது. அதன்படி, மருத்துவர்கள் இனி, நோயாளி களுக்கு தரும் மருந்து சீட்டில், தெளிவாகவும், பெரிய எழுத்துகளாலும் எழுத வேண்டியது கட்டாயம்.

மேலும், நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதற்கு உதவும் வகையில், மருத்துவர்கள் இனி பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், மருந்தினுடைய பிராண்ட் பெயரை எழுதாமல், பொதுப் பண்பு அடிப்படையிலான பெயர்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

அக இ - 20.06.2015 மற்றும் 27.06.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க இயக்குனர் உத்தரவு.

Wednesday, June 10, 2015

பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகள் சரிசெய்ய வேண்டும்.தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு

பள்ளியில் திறந்த வெளி கிணறுகள் ஆபத்தான வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பள்ளிகள் ஆய்வு ஊராட்சி ஒன்றியம், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டு ஆய்வு, பள்ளிகள் பார்வை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மாதம் தோறும் 5 பள்ளிகளில் ஆண்டு ஆய்வும், 18 பள்ளிகள் பார்வையிட வேண்டும். இதில் செப்டம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 2 பள்ளிகளில் ஆண்டு ஆய்வும், 12 பள்ளிகள் பார்வையிட வேண்டும். ஆசிரியர்கள் பாராட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு ஆய்வு செய்யப்படாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், ஆண்டு ஆய்வு தினத்தன்று நாள் முழுவதும் பள்ளியில் இருந்து துல்லியமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.

சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களை பாராட்டுவதுடன், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியின் கட்டமைப்பு, கணினி, தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் மற்றும் நூலகப் பயன்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

உதவி பெறும் பள்ளிகள் பள்ளியில் திறந்த வெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள் ஆபத்தான வகையில் இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உதவி பெறும் பள்ளிகளையும் துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி பதிவேடுகள் பரிசீலிக்கப்படுவதுடன், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பிளஸ் 2 மறுமதிப்பீடு,மறுகூட்டல் மதிப்பெண் ஒரிரு நாளில் வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் குறித்த விவரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்கான இணையதள முகவரி விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 7-ஆம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்த லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில், ஆயிரக்கணக்கானோர் மட்டுமே மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் பெற கடந்த ஜூன் 1-ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.

மாணவர்களின் மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண்ணைத் தொகுக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதால், திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் தேர்வுத் துறையின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எம்.பி.பி.எஸ். - பி.இ. தேர்வுக் குழு: திருத்தியமைக்கப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி., மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

புதிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பெண் விவரங்கள் அரசின் "நிக்' மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவர்களுக்கான தாற்காலிக புதிய மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். மதிப்பெண் மாற்றம் இருந்தால் மட்டுமே...: இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ள மறு கூட்டல், மறு மதிப்பீடு மதிப்பெண் மாணவர் பட்டியலில், தங்களது பதிவு எண் இல்லாவிட்டால் உரிய பாடத்துக்குரிய விடைத்தாளில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள், அறிவிக்கப்படும் நாளில் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களுக்குச் சென்று, தங்களது பழைய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பதிவு

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யவேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும், 2015-16ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளில் செய்முறை பயிற்சியில் பங்கேற்காத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

நேற்று முதல் பெயர் பதிவுப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.பதிவு பணிகள் முடிந்த பின், மாவட்ட கல்வி அலுவலரால் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தமையங்களுக்கு தொடர்ந்து சென்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்புகளில், 80 சதவீத வருகை பதிவு இருக்கவேண்டியது கட்டாயம். இதற்கான விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உத்தரவு

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி செயல்பாட்டில் உள்ள சிரமங்களை போக்க உதவ வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரத்தில், ஒரு அரசு துவக்க அல்லது நடுநிலைப் பள்ளியை, தொடர்ந்து ஒரு பருவம் முழுவதும், மாதந்தோறும் பார்வையிட வேண்டும்; பள்ளி தரத்தை முன்னேற்றும் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இந்த பணியை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பயிற்சி நிறுவன முதல்வர்களும், வட்டாரத்தில் ஒரு பள்ளியை தேர்வு செய்து, இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்பான அரசு விளக்கக்கடிதம்

Click below

https://drive.google.com/file/d/0BwpC-9IEQAb7U19rWWpiT3liNlk/view

பணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான அரசின் அறிவுரைகள்

Click below

http://cms.tn.gov.in/sites/default/files/gos/Lr%20No.185220001.pdf

Tuesday, June 09, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண்.கீ ஆன்சர் இல்லை

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட்ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது. அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மே 31ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதினர்.

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ஆரம்பநிலை பணிகள் தற்போது நடந்து வருகின்றன. முதல் கட்டமாக எழுத்து தேர்வு அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட வாரியாக காலியிடங்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் மாவட்ட அளவில் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட வாரியாக கட்ஆப் நிர்ணயிக்கப்பட உள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். கட்ஆப் மதிப்பெண் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும்.

குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை, அந்த மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப கட்ஆப் மதிப்பெண் அமைந்திருக்கும். தேர்வுத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘ஏற்கனவே காலிப்பணியிடம் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விடைத்தாள் மதிப்பீட்டு பணி, கட்ஆப் மதிப்பெண் ஆகியவை மாவட்ட அளவிலேயே இருக்கும். ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்த ஒரு விண்ணப்பதாரர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பார். வேறு மாவட்டத்தில் இதே மதிப்பெண் பெற்ற தேர்வருக்கு நேர்காணல் வாய்ப்பு வராமல் போகலாம்.

இத்தேர்வுக்கு கீ ஆன்சர் எதுவும் வெளியிடப்படாது,’’ என்றார். எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், நேர்காணல் அடிப்படையிலேயே ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்யும் பள்ளிக்கல்வித் துறையின் முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை,கோவையில் நடந்த பிளஸ் 2தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு,மறுகூட்டல் முடிந்தது

மதுரை, கோவையில் நடந்த பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் பணிகள் முடிவடைந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட்டன. மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேர்வுத்துறைக்கு வந்தன. வழக்கமாக, சென்னையில்தான் மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்யப்படும்.

ஆனால் இந்த ஆண்டு சென்னையை தவிர்த்து மதுரை, கோவையில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்யப்பட்டது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தாளும் 3 ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டது.

5 ஆயிரம் விடைத்தாள் மறுமதிப்பீடும், 4 ஆயிரம் விடைத்தாள் மறு கூட்டலும் செய்யப்பட்டன. கடந்த 7ம் தேதி பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. இதுகுறித்த விவரம் தேர்வுத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என அமுதவல்லி கூறியுள்ளார்.

தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ உண்மை தன்மை அறிவது எப்படி?

நுகர்வோர் வாங்கும் தலைக்கவசத்தின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என, இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், ஐ.எஸ்.ஐ முத்திரையை உரிய அனுமதியின்றி பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார் அளிப்பவர்களுக்கு ரூ.5,000 வரை சன்மானம் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தலைக்கவசம் வாங்கிய ரசீதைக் காட்டிய பிறகே வாகனத்தின் ஆவணங்களும், உரிமமும் திருப்பித் தரப்படும் என, பொதுமக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.எஸ்.எஸ் முத்திரை எதற்காக? பொருள்களின் தரத்தை உறுதிசெய்ய இந்திய தர நிர்ணய அமைவனத்தால் (பி.ஐ.எஸ்) முறையான பரிசோதனைகளுக்குப் பிறகு ஐ.எஸ்.ஐ முத்திரை அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு, அதிகபட்ச நுகர்வு, உடல்நலன் சார்ந்த பொருள்களான சிமெண்ட், தலைக்கவசம், மின் கம்பங்கள், பால்புட்டி, பால்பவுடர் உள்ளிட்ட 92 பொருள்களுக்கு தர நிர்ணயச் சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போலி தலைக்கவசத்தை கண்டறிவது எப்படி? தலைக்கவசத்துக்கான ஐ.எஸ்.ஐ குறியீடு ஐந:4151 என்பதாகும். இது ஒவ்வொரு தலைக்கவசத்திலும் ஐ.எஸ்.ஐ முத்திரைக்கு மேல் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதவிர, ஐ.எஸ்.ஐ முத்திரைக்குக் கீழ் CML-XXXXXXX (7 இலக்க லைசென்சு எண்) குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், நுகர்வோர் வாங்கும் தலைக்கவசம் உண்மையானதுதானா என்பதைக் கண்டறிய www.bis.org.in என்ற இணையதளத்தில் Product Certification Online Information Application Licence Related என்பதை கிளிக் செய்து, நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் அங்கீகாரம் பெற்ற 162 தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல், முகவரி, அங்கீகார உரிம எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் தெரிவித்தனர். ரசீது அவசியம்: உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக, சிலர் தலைக்கவச விற்பனை நிலையங்களில் வாங்குவதை தவிர்த்து, சாலையோரக் கடைகளில் தலைக்கவசம் வாங்க முற்படுகின்றனர்.

ஆனால், அவை அனைத்தும் உண்மையானவையா என்பதைக் கூற இயலாது. இருப்பினும், சாலையோர கடைகளில் வாங்கினாலும் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் கூடிய தலைக்கவசத்தை வாங்கியதற்கான ரசீது பெறுவது அவசியம். மேலும், தலைக்கவசத்தை வாங்கிய பிறகு, அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை இந்திய தர நிர்ணய அமைவனத்துக்கு தெரிவிக்கவும் வேண்டும். இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) இயக்குநர் டி.பி.நாராயணன் கூறியதாவது: நுகர்வோர் கடைகளில் ஐ.எஸ்.ஐ., ஹால்மார்க் முத்திரையுடன் வாங்கிய பொருள்களின் தரத்தில் குறைபாடுகள் இருப்பதாக அறிந்தால், அருகில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவனத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது www.bis.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். அதன் பின்னர், நுகர்வோரின் குறைகளைக் களைய ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஐ.எஸ்.ஐ., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ. 50,000 வரை அபராதமும், ஆறு மாத கடுங்காவல் தண்டனையும் வழங்க சட்டம் உள்ளது என்றார்.

தொலைபேசியில் புகார் புகார்தாரர்கள் தங்களது புகார் குறித்த முழு விவரங்களை sro@bis.org.in என் மின்னஞ்சல் மூலமாகவோ, 044-22541442, 22541220, 22542365 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். புகார்தாரர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே நுகர்வோர்கள் போலி முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும். புகார்தாரர்கள் அளிக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்ட பின்னர், அவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) இயக்குநர் டி.பி.நாராயணன் தெரிவித்தார்.

மழலையர் முன்பருவ கல்வி.வரைவு வழிகாட்டுதல்.வெளியீடு

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான (பிளே ஸ்கூல்) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒன்றரை வயது நிறைவு செய்த குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation என்ற இணையதளத்தில் பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகாரம் பெறாமல் செயல்படும் மழலையர் முன்பருவப் பள்ளிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை- வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம், மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. "நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்ட பிறகும், அந்த விதிமுறைகளை வகுத்து அவற்றை இறுதி செய்வதில் அரசுத் தரப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த விசாரணைக்குள் (6 வாரத்துக்குள்) இந்த விதிமுறைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என்று கூறி, வழக்கு விசாரணையை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: வரைவு வழிகாட்டுதல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள், தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் முன்பருவப் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அங்கீகாரம் புதுப்பிப்பு வழங்கும் அதிகாரம் மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி அலுவலருக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிக் கட்டடம்: பள்ளிக் கட்டடமானது சொந்தக் கட்டடமாகவோ அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டடமாகவோ இருக்க வேண்டும். மேலும், கான்கிரீட் கட்டடமாகவும், இரும்பு முள்வேலியால் சூழப்படாததாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் ஒரு குழந்தைக்கு 10 சதுர அடி என்ற அளவில் வகுப்பறை இடப் பரப்பு அமைந்திருக்க வேண்டும். வகுப்பறைகள் இரண்டு நுழைவு வாயில்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். வயது வரம்பு: மழலையர் முன்பருவப் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைக்கு ஜூலை 31-இல் ஒன்றரை வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். இந்த வயது உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படக் கூடாது. மேலும் ஒரு வகுப்பறைக்கு 15 குழந்தைகள் என்ற அளவில் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் இந்தப் பள்ளிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களின் குழந்தைகள் மட்டுமே பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆசிரியர் தகுதி: இந்தப் பள்ளிகளில் ஆசிரியராகச் சேர்க்கப்படுபவர்கள், பிளஸ் 2 முடித்து தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது மனை அறிவியலில் பட்டப் படிப்பு அல்லது பி.எட். அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர்களாக இருத்தல் அவசியம். இந்தப் பள்ளிகளில் குழந்தைகள் கண்டிக்கப்படக் கூடாது, தினமும் 3 மணி நேரத்துக்கு மேல் பள்ளிகள் இயங்கக் கூடாது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு பள்ளி மூடப்பட்டு விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த வரைவு வழிகாட்டுதலில் விதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகளை அனுப்பலாம்... மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வருகிற 22-ஆம் தேதிக்குள் "இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006' என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு

பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இவற்றில் உள்ள 'பார் கோடில்' வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டை குஜராத் அகமதாபாத்தில் தயாரிக்கப்படுகிறது.

இதனால் 2014 அக்.,15 பின் சேர்ந்த புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகின்றன. அதற்கு முன் சேர்ந்த பழைய வாக்காளர்களிடம் கருப்பு, வெள்ளை நிற காகிதத்தில் 'லேமினேசன்' செய்யப்பட்ட சாதாரண அடையாள அட்டைகளே உள்ளன. தற்போது அவற்றையும் 'ஸ்மார்ட் கார்டில்' வடிவில் வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கு்'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியல், ஆதார் எண் ஒப்பிடும் பணி முடிந்தவுடன் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். பழைய வாக்காளர்கள் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்,” என்றார்.