இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, March 20, 2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் தினமும் 1,250 பேர் கலந்துகொள்கிறார்கள். 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும். விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தகுதித்தேர்வின் 2-வது தாளில் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, March 19, 2014

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தட்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 26–ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு எழுத தட்கல் முறையில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.tndge.in என்ற இணையதளத்தில் SSLC EXAM MARCH 2014 PRIVATE CANDIDATE / TATKAL HALL TICKET PRINT OUT என கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் (அப்ளிகேசன் நம்பர்) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் ஹால்டிக்கெட் திரையில் தோன்றும், அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவியல் பாட செய்முறை தேர்வு இன்று முதல் 22–ந் தேதி வரை சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. ‘‘சிறப்பு அனுமதி திட்டத்தில்’’ (தட்கல்) விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அறிவியல் செய்முறை பதிவேடு (ரெக்கார்டு நோட்டு) ஆகியவற்றுடன் தாங்கள் ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியிலேயே செய்முறை தேர்வுக்கு கலந்து கொள்ளுதல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் செய்முறை தேர்வு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

TNPSC: Results of Departmental Examinations - DECEMBER 2013 (Updated on 18 March 2014) -

Tuesday, March 18, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

  ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

ஒரு மையத்துக்கு 300 பேர் வீதம் 5 மையங்களில் நாளொன்றுக்கு 1,500 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைப் பாதிக்காத வகையில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 46 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் தயார்

  வரும் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேவையான 94 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் மே மாதம் இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. அதேபோல், பிளஸ் 1 வகுப்புக்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்காக 5 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சடிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் புத்தகங்கள் அனைத்தும் வரும் மே மாதத்துக்குள் அச்சிடப்பட்டு, பள்ளி தொடங்குவதற்கு முன்னதாகவே அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சிடும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிகிறது.

எஸ்.எம்.எஸ்., பண்ணுங்க ஓட்டுச்சாவடியை கண்டுபிடிங்க

:எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது.முதல்முறையாக ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே ஓட்டளித்த பலருக்கும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ள பாகம் எண், வரிசை எண் தெரிவதில்லை. எங்கு ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரமும் தெரிவதில்லை.வாக்காளர்களின் வசதிக்காக, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனில், ரைட் மெசேஜ் பகுதிக்குச் சென்று, திரையில், 'epic' என்று டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு, வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின் அதனை, 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.ஒரே நிமிடத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும். அதில் உங்கள் பெயர், பூத் எண், அதன் முகவரி ஆகிய விபரங்கள் வெளியாகும். இந்த விபரம் இருந்தாலே போதும். பூத் சிலிப் கூட தேவையில்லை. இதில் உள்ள விபரம் மூலம் ஓட்டளிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வுஒரு வாரம் 'ஸ்டடி லீவு !'

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், ஒரு வாரம், விடுமுறை அறிவித்து உள்ளன.வரும், 25ம் தேதியுடன், பிளஸ் 2 தேர்வு முடிகிறது. மறுநாள், 26ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்குகிறது. இதற்கு, இன்னும், ஒரு வாரம் மட்டுமே உள்ளது.அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை முடித்துவிட்ட மாணவ, மாணவியர், எழுத்து தேர்வுக்கு, ஆயத்தமாகி வருகின்றனர்; பள்ளிகளில், மாணவருக்கு, இறுதிகட்டமாக, தேர்வு நுணுக்கங்கள், ஆலோசனை வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தேர்வெழுத உள்ள, 10 லட்சம் மாணவ, மாணவியருக்கும், தேர்வுத்துறை இணையதளத்தில், ஓரிரு நாளில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட உள்ளன.

இதற்காக, தேர்வுத்துறை, ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி, 'லிங்க்' வசதியை கொடுத்துள்ளது.தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், ஒவ்வொரு பள்ளியும், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து, தங்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஹால் டிக்கெட்டுகளை, பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு, வழங்குவர். வரும், 20 அல்லது, 21ம் தேதியில், ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, கடைசி நேரத்தில், மாணவர்கள், தேர்வுக்கு, நல்ல முறையில் தயாராவதற்கு வசதியாக, பல தனியார் பள்ளிகள், இன்று முதல், விடுமுறை அறிவித்து உள்ளன.-

10 சதவீத அகவிலைப்படியைஉடனடியாக வழங்க TETOJAC கோரிக்கை


   தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது. இந்த அமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 'மத்திய அரசு, ஜன., 1 முதல், 10 சதவீத அகவிலைப்படி அறிவித்து உள்ளது. ஆனால், தமிழக அரசு, இன்னும், 10 சதவீத அகவிலைப்படியை வழங்கவில்லை. தமிழக முதல்வர், தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தகுதித் தேர்வில் விலக்கு அறிவிப்புகுழப்பத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்கள்:திருப்பி அனுப்பப்படும் பதிவேடு

    
      ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழகத்தில், 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடைமுறையில் உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 7.3.2012ல் அறிவிக்கப்பட்ட ஓர் உத்தரவில்(எண்:04/2012), 23.8.2010க்கு முன் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 23.8.2013க்கு பின் பணிநியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக 25.5.2013ல், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது

. இதன்படி, மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 2010 முதல் 2012 வரை, 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள், டி.இ.டி., தேர்வு எழுத தேவையில்லை என அப்போது அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், பணியேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்த ஆசிரியர்கள், தகுதி காண் பருவத்திற்காக, அவர்களது பணிப் பதிவேடுகளை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பப்படும் பணிப் பதிவேடுகளை கல்வி அதிகாரிகள் பரிசீலித்து, 'உங்கள் பணிநியமன உத்தரவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்தான், உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்,' என பதில் கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், "டி.இ.டி., தேர்வில், அரசு விலக்கு அளித்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை," என்றனர். பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறியதாவது:

இது 18 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புப்படி, 23.8.2010க்கு முன் பணி நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு, டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான 'தவிர்ப்பாணை', பள்ளிக் கல்வி மூலம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்,என்றனர்.

TNPSC: GR.-IV (2012-13) Counselling Schedule & Date-Wise vacancy position

மார்ச் 21-ல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு- முதல் முறையாக ஆன்லைனில் விடைத்தாள்கள் வெளியீடு


மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு மார்ச் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. முதல்முறையாக, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சி-டெட் என்று அழைக்கப்படும் இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி தேர்வு முடிவு வருகிற 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

தேர்வு முடிவை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். முதல்முறையாக ஆன்லைனில் விடைத்தாள் சி-டெட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், தேர்வின் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை (ஓ.எம்.ஆர். ஷீட்) முதல்முறையாக சி.பி.எஸ்.இ. ஆன்லைனில் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை மேற்கண்ட இணையதளத்தில் குறிப்பிட்டு, ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதில் உள்ள விவரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்குள் ctet@cbse.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும். அதேபோல், கீ ஆன்சரில் ஏதேனும் தவறு இருந்தால் அதுகுறித்து உரிய ஆவணங்களுடன் 19-ம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் இ-மெயில் மூலம் தகவல் அனுப்பிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிய type EPIC no space Voter ID no &msg to 9444123456 குறுஞ்செய்தி வந்துவிடுm

Monday, March 17, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், ஒரு மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அங்கிருந்து, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் அறிவிக்கும், மாவட்டத்தில் உள்ள, கல்வி மாவட்டத்துக்கு, விடைத்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. இம்முறை, தனியார் பார்சல் வேன் மூலம், விடைத்தாள்கள் அனுப்பபடுகின்றன. விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும், 21ம் தேதி துவங்கும் நிலையில், அவற்றை திருத்தி முடிக்க, 10 முதல், 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம் என, மொழி பாடங்களில், முதல் மற்றும் இரண்டாம் விடைத்தாள்களை, வரும், 21ம் தேதி முதல் திருத்தி, மதிப்பெண் வழங்கும் பணியை, ஏப்., 5க்குள்ளும், பிற பாடங்களை, வரும், 1ம் தேதி துவங்கி, 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் முதல் தாள் திருத்தம் முடிந்த பின், இரண்டாம் தாள் திருத்தம் செய்ய, வழங்கப்படும். பெறப்பட்டுள்ள விடைத்தாள், ஆசிரியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொரு நாளும், எவ்வளவு விடைத்தாள் திருத்தி வழங்க வேண்டும் என, கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தவறான கேள்விக்கு 6 மதிப்பெண்: தேர்வுத்துறை அறிவிப்பு

''பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார். பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஆய்வு செய்த தேர்வுத்துறை, 47வது கேள்வியை, 'தொட்டிருந்தால்' அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறுகையில், ''குறிப்பிட்ட கேள்வியின்படி விடை அளித்தால், சரியான விடை வருகிறது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் குழப்பம் அடைந்ததாக, தகவல் வந்துள்ளது. எனவே, அந்த கேள்வியை, 'அட்டன்' செய்திருந்தால், அதற்குரிய மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என்றார். அவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 24ல் துவங்கும். ஏப்ரல், 15ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளோம். இந்த பணியில், 50 ஆயிரம் ஆசிரியர், இதர ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். ஏப்ரல், 15க்குள், இந்த பணி முடிந்தால், அதற்கு அடுத்த கட்ட பணிகள் முடிய, மேலும், 15 நாள் ஆகும்.

எனவே, கடந்த ஆண்டைப்போல், மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு, மே, 9ல், தேர்வு முடிவு ?வளியானது. இந்த ஆண்டு, மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும்பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு ?வளியாகவும் வாய்ப்பு உள்ளது.

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சிl

Sunday, March 16, 2014

TNPSC VAO Exam notification


அரசு ஊழியர் சங்கம் எந்த கட்சிக்கு ஆதரவு


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார். ஈரோட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடந்த, மகளிர் கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழ்செல்வி, நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 13 லட்சம் பேர் உள்ளனர். அனைத்து மாநிலங்களும், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி, அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்று வரை கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின்போது, தொகுப்பு, மதிப்பு ஊதியமுறை ரத்து, புதிய பென்ஷன் திட்டம் திருத்தம், ஊதியக்குழு முரண்பாடு களைதல், ஊழியர் சங்கங்களை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்தித்து பேசுதல் என, பல வாக்குறுதிகளை அளித்த, தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, மூன்றாண்டுகளாக சந்திக்க முடியவில்லை. சென்னையில், முதல்வரை சந்திக்க, ஒரு லட்சம் பேரை திரட்டி, பேரணி நடத்தியபோதிலும், சந்திக்க முடியவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற, வாக்குறுதி அளிப்பவருக்கு மட்டுமே, லோக்சபா தேர்தலில், அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். தமிழகத்தில், அடுத்த மாதம், 24ல், லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

தமிழக துவக்க பள்ளிகளில் ஆங்கிலவழி சேர்க்கை துவக்கம்


நடப்பு கல்வியாண்டில், வகுப்புகள் இன்னமும், முடிவடையாத நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், வரும், கல்வி ஆண்டிற்கான, ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, துவக்கப் பள்ளியாக கருதப்படுகிறது. தமிழக, அரசு துவக்கப் பள்ளிகளில், கடந்த ஆண்டு, ஆங்கில வழி கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி, ஒன்றாம் வகுப்புக்கு, மாணவர் சேர்க்கை நடந்தது.

ஒரே பள்ளியில், ஒரு வகுப்பறையில் தமிழ்வழி கல்வியும், மற்றொரு வகுப்பறையில், ஆங்கில வழி பாடமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆங்கில வழி கல்விக்கான, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசு துவக்க பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கான, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. நடப்பு கல்வியாண்டு, முடிவதற்குள், வரும் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது

. அந்த வகையில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு, ஆங்கில வழி கல்வி, மாணவர் சேர்க்கை நடப்பதாக, அரசு துவக்க பள்ளிகள் முன், அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில், தமிழ் வழி கல்வி, பெரும்பாலும் கிடையாது. அரசு பள்ளிகளில் மட்டும் தான், தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆங்கில வழியில், தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும் முன், அரசு பள்ளிகளில், சேர்க்கை, துவங்கியுள்ளது. கல்வியாண்டு, ஜூன் மாதம் துவங்கி, ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலேயே, துவக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.

Friday, March 14, 2014

பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண் வாக்குப்பதிவு அலுவ லர்கள் வாக்குப்பதிவுக்கு முன் தினமே சென்று விட வேண்டும் என விதிமுறைகள் இருந்தன. இதையும் தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.

பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும். இணையதளங்கள் பயன்பாடு தேர்தல் பிரசாரத்துக்காக இணையதளங் களை பயன்படுத்தினால் அதுவும் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும். இணைய தளங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணைய அனுமதியைப் பெற வேண்டும். எந்த இணைய தளம், அதுகுறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கி பணப் பரிமாற்றம் வங்கி பணப்பரிமாற்றம் தொடர்பாக இதுவரை வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் தகவலைத் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்துவோர், கூட்டம் நடப்பதற்கு 12 மணி நேரம் முன்பு தான் மேடை, கொடிதோரணங்களை அமைக்க வேண்டும். அதே போல் கூட்டம் முடிந்த 5 மணி நேரத்தில் அவற்றை அகற்ற வேண்டும்.

Annamalai University May 2014 Exam time table

TN Voters ONLINE REGISTRATION

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் கண்டறிய