Pages

Friday, November 30, 2012

பி.எப்., சந்தாதாரர்களுக்குஇ - பாஸ்புக் அறிமுகம

் :தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தங்கள் கணக்கு விவரங்களை, ஆன்-லைனில் தெரிந்து கொள்ளும் வகையில், இ-பாஸ்புக் சேவை, நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களுக்கு, அவர்களது கணக்கில் சேர்ந்துள்ள, சந்தா மற்றும் வட்டி விவரங்கள் அடங்கிய ரசீது, ஆண்டுதோறும் வழங்கப்பட்டது.

இதை, மின்னணு ரசீதாக பார்க்கும் வசதி, இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சந்தாதாரரும், தங்கள் மாதாந்திரா கணக்கு விவரங்கள் அடங்கிய, மின்னணு ரசீதை, இ.பி.எப்., இணையதளத்தில் பார்க்க, வசதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது, இந்த கணக்கு விவரங்களை, மாதாந்தோறும் டவுன்லோடு செய்து கொள்ளும், இ-பாஸ்புக் வசதியை, மத்திய வருங்கால வைப்பு நிதி கமிஷனர், ஆர்.சி.மிஸ்ரா, நேற்று துவக்கி வைத்தார். இந்த வசதியை, www.epbõindia.gov.in இணையதளத்தில் பெறலாம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ள சந்தாதாரர்கள், இந்த இணையதளத்தில், தங்களது போட்டோவுடன் கூடிய அடையாள எண் உள்ள, பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். பாஸ்வேர்டாக, மொபைல் போன் எண்ணை பதிய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்த பிறகு, தங்கள் கணக்கு எண்ணை செலுத்தி, பாஸ்புக்கை டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

உடற்கல்வி ஆசிரியர் பணி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

  ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அடுத்த மாதம், 7ம் தேதி, கலந்தாய்வு நடக்கிறது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளிகளில், 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு, காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஒதுக்கீடு பெறப்பட்டது. இதன் படி, ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட, 47 பேருக்கு, அடுத்த மாதம், 7ம் தேதி, 11:00 மணிக்கு, சேப்பாக்கம், எழிலக இணைப்பு கட்டடத்தில் உள்ள, ஆதி திராவிடர் நல கமிஷனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கிறது.

அன்று, உரிய சான்றுகளுடன், தவறாமல் ஆஜராக வேண்டும். இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Wednesday, November 28, 2012

கூட்டுறவு துறையில் 3,589 பேரை நியமிக்க புதிய பணியிடம் உருவாக்கி உத்தரவு

  தமிழக கூட்டுறவு துறையில், 3,589 பேரை நியமிக்க, புதிய பணியிடத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பத்து ஆயிரத்து, 442 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில், 2012 மார்ச், 31ம் தேதி வரை, கடன் நிலுவை அடிப்படையில் பணியாளர்களின் பணிநிலை திறனில் திருத்தம் செய்து, கூட்டுறவு பதிவாளர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடன் நிலுவை, 10 கோடி ரூபாய்க்கு மேலுள்ள, ஒவ்வொரு மூன்று கோடி ரூபாய்க்கும், ஒரு உதவியாளரை நியமனம் செய்து கொள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் சங்கங்களில், குறைந்தது, 25 கோடி ரூபாய் முதல், அதிகபட்சம், 50 கோடி ரூபாய் வரை, கடன் நிலுவை உள்ளது. இதில், 25 கோடி கடன் நிலுவை எனில், 10 கோடி ரூபாய் போக, மீதமுள்ள, 15 கோடியில், ஒவ்வொரு மூன்று கோடி ரூபாய்க்கு, ஒருவர் வீதம், ஐந்து பேரும், அதன் அடிப்படையில், 50 கோடி கடன் நிலுவைக்கு, 13 பேர் வீதம், புதிதாக நியமித்து கொள்ளலாம். தற்போது, கூட்டுறவு துறையில், 3,589 பணியிடங்கள் நிரப்ப, ஆளெடுக்கப்பட உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படுவோர், கடன் சங்கங்களில், உதவியாளராக நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனத்தை, 50 சதவீதம், நேரடியாகவும், பதவி உயர்வு மூலமும் பூர்த்தி செய்து கொள்ள, புதிய திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடன் சங்கத்தில் பணியாற்றும் சிற்றெழுத்தர், ரேஷன்கடை சேல்ஸ்மேன் ஆகியோர் உதவியாளராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு, உருவாகி உள்ளதால், ரேஷன்கடை பணியாளர்கள், பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர் இதற்கு முன், ஐந்து கோடி ரூபாய்க்கு மேல், எவ்வளவு கடன் நிலுவை இருந்தாலும், இரு உதவியாளர் பணியிடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்களோடு சேர்ந்து, சங்க செயலர், உதவி செயலர், சீனியர் கிளர்க், அலுவலக உதவியாளர், சிற்றெழுத்தர் என, ஏழு பேர் மட்டுமே பணியில் இருந்தனர். புதிய திருத்தத்தின் மூலம், குறைந்தது, 12 பேர் முதல், அதிகபட்சம், 20 பேர் வரை பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது. ஆளெடுப்பு காரணமாகவே, பணிநிலை திறனில் திருத்தம் செய்து, புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கான இலவச திட்டங்கள் மார்ச்சுக்குள் முடிக்க கல்வித்துறை தீவிரம

் நிலுவையில் உள்ள மாணவ, மாணவியருக்கான இலவச திட்டங்களை, மார்ச் மாதத்திற்குள் முடிப்பதற்கு, கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கலர் பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணபெட்டி திட்டங்களை, விரைவில் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பார் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. இவற்றில், இலவச பாடப் புத்தகங்கள், சைக்கிள், பஸ் பாஸ் உள்ளிட்ட சில திட்டங்கள் பழையவை. நோட்டுகள், "அட்லஸ்' , கலர் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, லேப்-டாப், ஊக்கத்தொகை, கணித உபகரணப்பெட்டி, காலணி ஆகியவை, புதிய திட்டங்கள். புதிய திட்டங்களில், நோட்டுகள், லேப்-டாப், ஊக்கத்தொகை திட்டங்கள் துவங்கப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, 92.28 லட்சம் மாணவ, மாணவியருக்கு, புத்தகப் பை வழங்கும் திட்டம், 1 முதல், 10ம் வகுப்பு வரை, 81 லட்சம் மாணவ, மாணவியருக்கு, காலணிகள் வழங்கும் திட்டம், 1 முதல், 5ம் வகுப்பு வரையிலான, 35 லட்சம் பேருக்கு, கலர் பென்சில்கள் வழங்கும் திட்டம் ஆகியவை, தொடக்க கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.
புதிய திட்டங்கள் செயல்பாடு குறித்து, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்த முன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, பொருட்கள் தயாராகி வருகின்றன. மிக விரைவில், வினியோகம் துவங்கும்' என, தெரிவித்தன. இதேபோல், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 16.11 கோடி ரூபாய் செலவில், கணித உபகரணப்பெட்டி வழங்கும் திட்டத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இத்திட்டமும் தயார் நிலையில் இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகப் பை, பென்சில் மற்றும் கணித உபகரணப்பெட்டி திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, விரைவில் துவக்கி வைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான, 46 லட்சம் மாணவ, மாணவியருக்கு, அட்லஸ் வழங்கும் திட்டம் துவக்கப்படும் எனவும், இத்திட்டம், 23 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டம், பாடநூல் கழகம் சார்பில், செயல்படுத்தப்படுகிறது. புதிய திட்டங்கள் செயல்பாடு குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா கூறியதாவது: விலையில்லா திட்டங்கள் அனைத்தையும், மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மாணவ, மாணவியருக்கான, மூன்று ஜோடி சீருடைகள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. நான்காவது ஜோடி சீருடைகளும், மிக விரைவில் வழங்கப்படும். கல்வியாண்டு முடிவதற்குள், நான்கு ஜோடி சீருடைகள், வேறு எந்த மாநிலத்திலும் வழங்கவில்லை. தமிழகத்தில் தான், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில், பள்ளிகள் துவங்கியதும், அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் வழங்க, இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, சபிதா கூறினார்.

64 உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நவ., 30 கடைசி-28-11-2012

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் 64 வகையான உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ பொது, எம்பிஏ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி யோகா, யோகா தெரபி, சைக்காலஜி, யோகா நேச்சுரோபதி, டிப்ளமோ இன் யோகா, பிட்னஸ் அண்டு நியூட்ரிஷன் உள்ளிட்ட 64 வகையான எம்.பி.ஏ., எம்.எஸ்சி, பி.எஸ்சி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் உடற்கல்வி படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளுக்கான காலம், தகுதி, கல்விக் கட்டணம், விண்ணப்ப படிவம் போன்ற விவரங்களை பெற www.tnpesu.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, November 27, 2012

ஜாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த மாதம் மாதிரி பட்டியல

் மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மாதிரி பட்டியல், பொது மக்களின் பார்வைக்காக, அடுத்த மாதம் வைக்கப்படுகிறது. அவற்றில், தவறுகள், ஆட்சேபம் ஏதேனும் இருப்பின், 30 நாட்களுக்குள், அவற்றை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

மக்களின் பொருளாதார நிலை மற்றும் ஜாதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி, டிசம்பர், 2011ல் துவங்கி, கடந்த இரு மாதங்களுக்கு முன் முடிந்தது. மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பப்படும், இக்கணக்கெடுப்பை, கணினியில் பதிவு செய்ய, புதிய மென்பொருளை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த மென்பொருளை, முழு வடிவத்தில் மாநில அரசுகளுக்கு அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், கணக்கெடுப்பு விவரங்களை கணினியில் பதிவு செய்யப்படவில்லை. தற்போது, மத்திய அரசின் மென்பொருள் பெறப்பட்டு, கணினியில் பதிவு செய்யும் பணிகளை, மாநில அரசு துவங்கியுள்ளது. இப்பணிகளை, அடுத்த மாத இறுதியில் முடிக்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின், வார்டு வாரியாக, கணக்கெடுப்பின் மாதிரி பட்டியல், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என, உள்ளாட்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மாதிரி பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, கருத்துக்கள் பெறப்படுகின்றன. இக்கருத்துக்களைக் கொண்டு, கணக்கெடுப்பில் திருத்தங்கள் செய்த பின், இறுதிப் பட்டியல், அடுத்தாண்டு பிப்ரவரி இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அந்த அதிகாரி தெரிவித்தார். சமூக பொருளாதார கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் முடிந்துள்ளது.

இந்நிலையில், கணக்கெடுப்பு மாதிரிப் பட்டியலில், ஜாதிகள் இடம்பெறாது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள், ஜாதியை சொல்வது, அவர்களின் விருப்பத்துக்குட்பட்டது. அவர் கூறும் ஜாதிகளை ஆதாரம் மூலம் நிரூபிக்கவில்லை . கணக்கெடுப்பில் சேர்க்கபப்பட்ட ஒருவர் என்ன ஜாதியை சார்ந்தவர் என்பதை, ஒப்பிட்டு சீர் செய்ய, அரசிடம் உரிய ஆதாரங்கள் இல்லை. ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பில் கூறப்பட்ட ஜாதிகள், மாதிரிப் பட்டியிலில் இடம் பெறாது. மத்திய அரசின் கவனத்துக்கு மட்டும், அது கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மாதிரி பட்டியலில் உள்ள விவரங்கள், தவறாக இருந்தால், அதை திருத்தவும், தகவல்களை நீக்கவும், தகவல்களை சேர்க்கவும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்படவுள்ளன. அதற்காக, பட்டியலில் வீட்டு உபயோகப் பொருள்கள் குறித்த தகவல்கள் தவறாக இருந்தால், அதைத் திருத்த, படிவம் - ஏ, குடும்ப உறுப்பினர் பற்றிய தவறான தகவல்களை திருத்த, படிவம் - பி, விடுபட்ட வீட்டு உபயோகப் பொருள்களை சேர்க்க, படிவம் - சி, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய, கூடுதல் தகவல்களை சேர்க்க, படிவம் - டி ஆகியவை அளிக்கப்படுகின்றன. மாதிரிப் பட்டியல் வெளியிட்ட, 30 நாள்களுக்குள், ஆட்சேபனைகளை அளிக்க வேண்டும். அடுத்த, 22 நாள்களில், திருத்தங்களை செய்து முடிக்க வேண்டும். மாதிரி பட்டியல் வெளியிட்ட, 52 நாள்களில் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Monday, November 26, 2012

பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வெஜிடபிள் பிரியாணி

் சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் நலன் கருதி 13 வகையான கலவை சாதங்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வெஜிடபிள் பிரியாணி போன்ற புதிய உணவுகளை தயாரிக்க சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்களுக்கு பிரபல சமையல் கலைஞர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி இந்த வாரத்தில் முடிகிறது. எனவே அடுத்த வாரத்தில் புதிய சத்துணவு முறை அமலுக்கு வருகிறது. முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தில் மட்டும் புதிய சத்துணவு வழங்கப்படும். இதன் வெற்றியை தொடர்ந்தே மற்ற பள்ளிகளுக்கு  விரிவுபடுத்தப்படும்.

அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியிலும், ஸ்ரீரங்கத்தில் உள்ள அந்தநல்லூர் பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகமாகிறது.

Saturday, November 24, 2012

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' ஜெயலலிதா வழங்கினார

் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சிறப்பு ஊக்கத் தொகை, நிரந்தர வைப்பு நிதி, "ஸ்மார்ட் கார்டு' ஆகிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித் துறைக்கான, கல்வி தகவல் மேலாண்மை முறை, இந்தாண்டு செப்டம்பர் மாதம் துவக்கப்பட்டது. இதில், நான்கு இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் இணையதளம் உள்ளது. இதில், அனைத்து விவரங்களும் பதிவேற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களைக் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு ' வழங்க முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஸ்மார்ட் கார்டுகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் கார்டில், மாணவ, மாணவியரின் பெயர், பெற்றோர் முகவரி, அவர்கள் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இடம் பெயரும் மாணவ, மாணவியர், வேறு பள்ளிகளில், இதன் மூலம் எளிதில் சேரலாம். இந்த திட்டத்தின் மூலம், 92 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

மேலும், அவர்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் பதியப்படும், "ஹெல்த் கார்டு' உடன், "ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைக்கப்படும். இக்கார்டு படிப்படியாக அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படுகிறது. "ஸ்மார்ட் கார்டு' திட்டம் தவிர, 2011-12ம் கல்வியாண்டில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற, 4.60 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். இதில், 10 மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 1,500 ரூபாய், பிளஸ் 2 படிப்பவர்களுக்கு, 2,000 ரூபாயும், அவர்கள் பெயரில், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, பிளஸ் 2 முடிக்கும் போது, வட்டியுடன் வழங்கப்படும்.
இந்த கல்வியாண்டில், 21.52 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், 353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாணவ, மாணவியரின் தாய், தந்தையர் விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்பு செலவிற்காக, ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிரந்த வைப்பு நிதியாக வழங்கப்படும் என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடந்த மற்றும் இந்த கல்வியாண்டுகளில், 720 மாணவ, மாணவியருக்கு, 3.60 கோடி ரூபாய்க்கான வைப்பு நிதி பத்திரங்களையும், தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.

உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது

. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது. அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது.

சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. "மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்' என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, November 23, 2012

ரயிலில் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் டிச.,1ம் தேதி முதல்பயணத்தின் போது, ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம்

"ரயிலில் அனைத்து வகுப்பு பயணிகளும், பயணத்தின் போது, வரும் டிச.,1ம் தேதி முதல், ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில், "ஏசி'முதல் வகுப்பு, "ஏசி' 2ம் வகுப்பு, "ஏசி., மூன்றாம் வகுப்பு, "ஏசி' சேர்கார் வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள் ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்பவர்கள் ஒரிஜினல் அடையாள அட்டை தேவையில்லை.ரயில் டிக்கெட் முன்பதிவுகளில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில், பயணிகள் முறைகேடாக பயணம் செய்வது அதிகரித்துள்ளது என, ரயில்வே நிர்வாகத்திற்கு புகார்கள் வந்ததால், வரும் டிச.,1ம் தேதி முதல், அனைத்து வகுப்பு பயணிகளும், பயணத்தின் போது ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும், பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்ட, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, வங்கி கிரடிட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய தேசிய வங்கிகளின் அடையாள அட்டை, பாஸ்போர்ட், போட்டோவுடன் கூடிய மாணவர்கள் அடையாள அட்டை, பொதுதுறை நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை இவைகளில் ஒன்றினை, ரயில் பயணத்தின் போது, பயணிகள் கொண்டு வரவேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது

.ரயிலில் பயணம் செய்ய இ.டிக்கெட், ஐ.டிக்கெட், தத்கால் டிக்கெட், மற்றும் ரயில் டிக்கெட் மையங்களில் ,டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவருக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.,

  "அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை.

ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது