இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 20, 2014

டிட்டோஜாக் - இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது

. * 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு

* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும

். * 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.

* 03.03.2014 அன்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் நாளை காலை பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திப்பு நடைபெற உள்ளதெனவும் தெரிவித்தார். டிட்டோஜாக்கில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் நடந்த மாபெரும் பேரணியால் தான் இன்று அரசு தரப்பில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டங்கள் ஓயாது

இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

  பள்ளி கல்வித்துறையில், 145, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள், உதவியாளர்களாக, நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர். "ஆன்லைன்' கலந்தாய்வு மூலம், பதவி உயர்வு செய்யப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டதாக, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். இதற்கிடையே, 2001 முதல், 2011 வரையிலான கால கட்டங்களில், பணியின்போது இறந்த கல்வித்துறை ஊழியர்களின் வாரிசுகள், 504 பேர், நேற்று முன்தினம், இளநிலை உதவியாளர்களாகவும், தட்டச்சர்களாகவும், பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், அவரவர், சொந்த மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டதாக, இயக்குனர் தெரிவித்தார்.

22.02.2014 CRC training module

IGNOU B.ed Term End Results - December 2013

Wednesday, February 19, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 2012ல் தேர்வு எழுதியோருக்கும் மதிப்பெண் சலுகைகோரி மனு

: தமிழகத்தில் 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும்  5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக்கோரிய மனுவுக்கு  பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி  தென்னூரை சேர்ந்த வின்சென்ட், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில்  ஆசிரியர்களுக்கு 2012 ஜூலையில் முதல் முறையாக தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில்  3  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதே ஆண்டு அக்டோபரில் நடந்த துணைத்தேர்வில்  11 சதவீதம் பேர்  தேர்ச்சி பெற்றனர்.

தகுதி தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை  வழங்கவேண் டும் என அரசுக்கு கோரிக்கை வி டுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று  பொதுப்பிரி வினர் தவிர்த்து மற்ற பிரிவுகளை சேர்ந் தவர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்  சலுகை வழங்க தமிழக அரசு பிப்ரவரி 6ல் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் 2013ம் ஆண்டில் நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கும்  மதிப்பெண் சலுகை  வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையை 2012ம்  ஆண்டில் ஜூலை மற்றும் அக்டோபர்  மாதம் நடந்த தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும் வழங்கவேண்டும். நான் 2012ல் நடந்த தேர்வில்  83 சதவீத  மதிப்பெண் பெற்றேன்.

எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால் தேர்வில்   வெற்றிப்பெறுவேன். எனவே, 2013ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கு  மதிப்பெண் சலுகை வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து  செய்யவேண்டும். 2012 தகுதி தேர்வில்  பங்கேற்றவர்களுக்கும் மதிப்பெண் சலுகை  வழங்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. மனுவை நீதிபதி  எம். எம்.சுந்தரேஷ் விசாரித் தார். மனுவுக்கு 2 வாரத் தில் பள்ளி கல்வி செயலா ளர்,   ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க  நோட்டீஸ் அனுப்ப  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசனை 25ம் தேதி நடக்கிறது

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக  சென்னையில்  வருகிற 25ம¢ தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு  பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு  செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் கல்வி அலு வலர்கள், மாவட்ட  கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலு  வலர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம்  வரும் 25ம்  தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அமைந்து உள்ள  தமிழ்நாடு மாசு கட்டு ப்பாட்டு வாரிய கூட்டரங்கில் நடக்கிறது.

இதில் பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் வீரமணி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைசெயலாளர் சபிதா   ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி  விகிதம்  அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வ¤வாதிக்கப்படுகிறது. இதற்கான  ஏற்பாடுகளை பள்ளிக் க ல்வித் துறை செய்து வருகிறது.

தத்கால்' திட்டம் நீட்டிப்பு : தேர்வு துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்' திட்டத்தில், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, இன்று ஒரு நாள், நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பில், "தேர்வுக்கான பதிவு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களின் விவரங்களை,www.tndge.in என்ற இணையதளத்தில் பார்த்து, தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கான காலக்கெடு, 20ம் மாலை, 5:00 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடம் : போட்டி தேர்வு நடத்தி நிரப்ப முடிவு

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில், உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், நேரடியாக நிரப்பப்பட்டது. தற்போது, திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், போட்டித் தேர்வு நடத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேளாண்மை கமிஷனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப, அனுமதி அளித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன "கவுன்சிலிங்'

""ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு, நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்பு: அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில், காலை, 10:00 மணி முதல், இந்த கலந்தாய்வு நடக்கும். டி.ஆர்.பி., தேர்வு வரிசை எண் அடிப்படையில், கலந்தாய்வு நடக்கும். முதலில், சொந்த மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, பின், வெளி மாவட்டங்களில் உள்ள காலி இடங்களுக்கும், கலந்தாய்வு நடக்கும்.

கலந்தாய்வுக்குப் பின், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் முதுகலை தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்' ஆகியவற்றுடன், நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, விலங்கியல், புவியியல், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி இயக்குனர், நிலை - 1, பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய ஐந்து பாடங்களுக்கான இறுதி தேர்வு முடிவு, நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதனால், இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில்,

""தேர்வு பட்டியல் தொடர்பான முழு விவரம், இன்னும், எங்களுக்கு வரவில்லை. பட்டியல் வந்ததும், அவர்களுக்கும், விரைவில், பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.

8th STD NATIONAL TALENT SEARCH EXAMINATION MODEL QUESTION PAPERS

Tuesday, February 18, 2014

583 முதுகலை ஆசிரியர்கள் நியமனம், 7ஆசிரியர்களுக்கு முதல்வர் இன்று பணி நியமனம் வழங்குகிறார்

ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த, 2,895 முதுகலை ஆசிரியர்களில், 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும், இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்தியது. வழக்கமாக, மூன்று மாதங்களுக்குள், ஒட்டு மொத்த தேர்வுப் பணிகளை முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடும், டி.ஆர்.பி.,க்கு, சமீப காலமாக, நேரம் சரியில்லையோ என்னவோ, தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் சிக்கி, படாதபாடு படுகிறது. 'முதுகலை தேர்வில், கேள்வி தவறு; சரியான விடை தரவில்லை' என, விதம் விதமாக, பல்வேறு வழக்குகளை, தேர்வர்கள் தொடர்ந்தனர்.

இதனால், கடும் இழுபறிக்குப் பின், தமிழ் பாடத்திற்கு மட்டும் இறுதி தேர்வு பட்டியலை தயாரித்து, பள்ளி கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., வழங்கியது. ஆனால், பிற பாடங்களுக்கான இறுதி பட்டியல், இன்று வரை தயாராகவில்லை. இன்னும், 30 வழக்குகள், நிலுவையில் இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட, இதர பாடங்களுக்கான வழக்குகள் எப்போது முடியும்; எப்போது இறுதி பட்டியல் தயாராகும் என, டி.ஆர்.பி.,க்கே, தெரியாத நிலை உள்ளது. இதற்கிடையே, தமிழ் பாடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 583 பேருக்கு மட்டும் இன்று, பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.

தலைமை செயலகத்தில், இன்று காலை நடக்கும் விழாவில், ஏழு ஆசிரியர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார். மேலும், 504 பேரை, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்து, அதற்கான உத்தரவுகளையும், முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, பல மாவட்டங்களில், கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறுகையில், 'இதர பாடங்களுக்கான பட்டியல் வந்தால், அவர்களையும், உடனடியாக பணி நியமனம் செய்வோம். தமிழ் பாட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, 21ம் தேதி, ஆன் - லைன் வழியில் நடக்கும்' என, தெரிவித்தது.

பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நடப்பு கல்வி ஆண்டிற்கான மேல்நிலை பொதுத்தேர்வு எழுத தேர்வுத்துறையால்   அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்  விதமாக சிறப்பு  அனுமதி திட்டத்தில் ஆன் லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்  ஆகும்.  தேர்வு செய்யப்பட்ட மையங்களில் இதற்காக விண்ணப்பிக்கலாம். தனியார்  பிரவுசிங் சென்டர்கள் மூலம்  விண்ணப்பிக்க இயலாது. சிறப்பு மையங்கள் பற்றிய  விபரத்தை www.tndge.in என்ற  இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை பதிவுச் சீ ட்டில் குறிப்பிடப்பட்டிருக் கும். 

சிறப்பு மையத்தில் உரிய கட்டணங்களுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும்  பாஸ்போர்ட் அளவு  புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய தேர்வு கட்டணத்துடன் ரூ.  ஆயிரம் சிறப்பு கட்டணம் மற்றும்  ஆன்லைன்பதிவு கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.  இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறையினர்  செய்துள்ளனர்.

உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. உயிரியல், புவியியல், ஹோம் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி ஆகிய பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் கிரேடு -1 பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்வு முடிவு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகளில் மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் நடத்தப்பட்டது. போட்டித் தேர்வு மதிப்பெண் மற்றும் பணி அனுபவம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி இந்த 4 பாடங்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் பணியிடத்துக்குமான தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு பிற பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Monday, February 17, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் சார்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைப்ப

ு. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் சார்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1,  அனைத்து வழக்குகளும் 17.02.14 பிற்பகல் நீதியரசர். ஆர் .சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மீண்டும் அடுத்த வாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதியரசர் ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைக்கால பட்ஜெட்: 9 லட்சம் மாணவர்களின் கல்விக் கடன் வட்டியில் சலுகை

'கல்விக்காக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படுகிறது. 31.03.2009 ஆண்டு வரை கல்விக் கடன் பெற்றவர்கள் மற்றும் 31.12.2013 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கு இது பொருந்தும். 31.12.2013-ன் கணக்கின்படி, நிலுவையில் உள்ள வட்டியை செலுத்துவதற்கான பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ளும். 01.01.2014க்குப் பிறகு கொடுக்கப்பட வேண்டிய வட்டியை கடன் பெற்றவர்கள் செலுத்த வேண்டும். இதன்மூலம் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் சுமார் 2600 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள். நடப்பு நிதியாண்டிலேயே 2600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்தத் தொகை கனரா வங்கிக்கு மாற்றித்தரப்படும். 01.04.2009-க்குப் பிறகு வழங்கப்பட்ட கல்விக் கடன்களுக்கான மத்திய வட்டி மானிய திட்டம் 2009-10ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, எனினும் 31.03.2009-க்கு முன்பு கடன் பெற்றவர்கள் வட்டியை செலுத்த இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் அவர்களுக்கு உதவி அளிக்க வேண்டியது அவசியமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மேல் நிலையில் இருந்த சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமே கல்விக் கடனைப் பெற முடிந்தது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 மாணவர்களுக்கு 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள கடன்களை வழங்கியுள்ளன' என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

NMMS Admition card

Login Page click below

http://tndge.in/login.aspx

மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

*2014 - 2015 ஆம் ஆண்டுக்கான வருமானவரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை.

*அடுத்த  30 ஆண்டுகளில் உலகின் 3 வதுபொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.

* 2016-2017 ஆம் ஆண்டு நிதி  ஆண்டில்  நிதி பற்றக்குறைய 3 சதவீதமாக குறைக்க இலக்கு.

*வடகிழக்கு மாநிலங்களுக்கு 1200 கோடிகூடுதல் நிதி ஒதுக்கிடு.

*பொதுத்துறை  வங்கிகளில் பெறப்பட்ட கல்வி கடன்களுக்கு வட்டிச்சலுகை வழங்கப்படும்.

*2009 ஆம் ஆண்டு  மார்ச் மாதத்துக்கு முன் கல்விக்டன் பெற்றவர்களுக்கு வட்டிசசலுகை.

*கல்விக்கடன் வட்டிச்சலுகையால் 9 லட்சம் பேர் பயனடைவார்கள்.

*அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க புதிய சலுகை வழங்கப்படும்.

*தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய வரி ஏதும் விதிக்கப்படவில்லை.

*உற்பத்தி வரி 12 சதவீகத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுள்ளடு.

*சிறியவகை கர்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவீத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு.

*நெல்லுக்கான சேவை வரி முற்றிலும் நீக்கம்.

*34 வது நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்.

*கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வறுமை  பெருமளவு குறைந்துள்ளது.

*செல்போன் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைவு

*ஊரக வீட்டு வசதி நிதியாக 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Sunday, February 16, 2014

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள


* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

* மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.
மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

- தோழமையுடன் - 
தேவராஜன், தஞ்சாவூர் .

Saturday, February 15, 2014

ஆசிரியர் பணி நியமனம் தாமதமாகும், புதிய நியமனம் ஜூன் மாதம் நடைபெறும்

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில் அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும் தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கும். அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர். இந்த முறை நடைபெற்ற தேர்விலும் பல குளறுபடிகள் ஏற்பட்டது. குறிப்பாக வினாத்தாளில் பல தவறுகள் இருந்தன. இதனால் பலர் வழக்கு தொடர்ந்தனர். எனவே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்சனைகளை கடந்து ரிசல்ட் வெளியானது. வழக்கமாக ரிசல்ட் வெளியான சில மாதங்களில் பணி நியமனம் வழங்கப்படும்.

 ஆனால் இந்த முறை ரிசல்ட் வெளியான பின்னர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பாதித்தது.  இதற்கிடையில் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீட்டு அடிப்படையில் குறைக்க வேண்டும் என்று பல அமைப்புகள் அரசை வலியுறுத்தியது.இது தொடர்பாக தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. தகுதியை மட்டும் பார்க்க வேண்டும். இதில் இடஒதுக்கீடு முறை கூடாது. மதிப்பெண் குறைப்பு இல்லை என்பதில் கண்டிப்புடன் இருந்தார். இதனால் 90 மதிப்பெண் பெற்ற 25 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

அவர்களுக்கு பணி நியமனம் செய்யப்பட இருந்தது. இந்த நிலையில் கடைசி கட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சனையில் தலையிட்டது. இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண் குறைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வன்கொடுமை சட்டம் பாயும் என்று எச்சரித்தது. இது அரசுக்கு நெருக்கடியை தந்தது. இதனால் 5சதவீத மதிப்பெண் குறைப்பை முதல்வர் அறிவித்தார். இதனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. அதாவது 90 மதிப்பெண் பெற்று 25ஆயிரம் பேரும், இப்போது 82 மதிப்பெண்ணாக குறைத்துள்ளதால் கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிதாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க வேண்டும். இப்பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஈடுபடுவார்கள

். இப்போது அவர்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மார்ச் 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த பணிக்கு முன்பாக பல ஆய்வு கூட்டம் நடக்கும். இதற்கு துறையின் இணை இயக்குனர்கள் இருக்க வேண்டும். எனவே தேர்வு முடியும் வரையில் சான்றிதழ் சரிபார்க்க முடியாது. பிளஸ்2 தேர்வு முடிந்ததும் மார்ச் மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும். எப்படியும் 10 நாட்களுக்கு மேல் இப்பணி நடக்கும். ஏப்ரல் மாதம் வெயிட்டேஜ் மதிப்பெண் பார்க்கப்படும். அதன் பின்னர் லோக்சபா பொதுத் தேர்தல் இருப்பதால், அடுத்த கல்வியாண்டில், அதாவது ஜுன் மாதம் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவாறு அவர் கூறினார்.

தமிழகத்தில், 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு

ு. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய, -மாநில அரசுகளின் பங்களிப்புடன், அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2010--11 ல், பள்ளி தகவல் மேலாண்மை அறிக்கையின் படி, ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் 1,851 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்; 698 ஆய்வகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை, அந்தந்த பள்ளி தலைமை ஆரியர்கள் மேற்பார்வையில், கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இனி, 'பொதுப் பணித்துறைக்கு நிதி வழங்கப்பட்டு, புதிய வகுப்பறைகள் கட்டப்படும்' என, அனைவருக்கும் இடைநிலை கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.