இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 19, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது. 

   அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி(  தாள்1), 18ம் தேதி(தாள் 2)  நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட் சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர். இவற்றில் தாள் 1ல்  12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று முதல் சான்று சரிபார்ப்பு 32 மாவட்டங்களில் நடக்கிறது. கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கடைபிடிக்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் போடும் முறை இந்த முறை இரண்டு தேர்விலும் தேர்ச்சி  பெற்றவர்களுக்கு கடைபிடிக்கப் போவதாக ஆசிரியர் தேர்வு  வாரியம் தெரிவித்துள்ளது.

இன்று தொடங்கும் இந்த சான்று சரிபார்ப்பு 27ம்  தேதி வரை நடக்கிறது. சான்று சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால்  அதை பதிவிறக்கம் செய்து கொண்டு உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அடையாளச் சான்று, கல்விச் சான்றுகள், சாதிச் சான்றுகள், அட்டஸ்டட் ஜெராக்ஸ் நக ல்கள், 3 போட்டோக்கள் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் சான்று சரிபார்ப்பு பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த 4 இயக்குநர்கள் தலைமையில் நடக்கிறது. 20 இணை இயக்கு நர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாநிலத்தில் 412 ஒன்றியங்களில், 3, 5, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதித்து அறியும், அடைவுத்திறன் தேர்வு நாளை துவங்க உள்ளது. இதற்காக, ஒன்றியத்திற்கு ஒவ்வொரு வகுப்பிற்கும், 10 பள்ளிகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், 3 மற்றும் 5ம் வகுப்பிற்கு நாளை தமிழ், கணிதமும், 22-ல் ஆங்கிலமும், 8ம் வகுப்பிற்கு 23ல் தமிழ்,கணிதம், 24-ல் ஆங்கில தேர்வும் நடக்கும். தேர்வு அறைக்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு கண்காணிப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர் அல்லது சிறப்பு கல்வியாளர். இவர்கள் தான் பணிபுரியும் ஒன்றியத்திலிருந்து அடுத்த ஒன்றியத்தில் கண்காணிப்பாளராக இருக்க வேண்டும். இரண்டாவது கண்காணிப்பாளராக ஆசிரியர் ஒருவர் செயல் படுவார்கள்.மாணவர்களுக்கு ஒரு வினாத்தாளும், ஆசிரியர்களுக்கு ஒரு வினாத்தாளும், தனித்தனியாக வழங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்களின் அடைவுத்திறன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுக்கான கல்வி திட்டம் தயாரிக்கப்படும்.

மாணவர், ஆசிரியர் விடைத்தாள் மதிப்பீடு செய்து, மதிப்பெண்கள் இணையதளம் மூலம், பதிவேற்றம் செய்யப்படும், என, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

TET Weigtage marks G.O-252,dt 5.10.2012

TET Cut-Off Online Calculator

Saturday, January 18, 2014

வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் விவரம் சேகரிப்பு

  நடப்பாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26ம் தேதியும் துவங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட, புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், 20 நாளில் தேர்வு முடிவு என, பல அதிரடி நடவடிக்கை, நடப்பு கல்வியாண்டில் எடுக்கப்பட்டுள்ளத

ு. தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, "நாமினல்ரோல்' தயாரிக்கப்பட்டு, ஆன் - லைன் மூலம், நேரடியாக, பள்ளியில் இருந்து, தேர்வுத் துறைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதல், தேர்வு முடிவு வெளியான உடன், மாணவர்களை அலைக்கழிக்காமல் இருக்க, வேலைவாய்ப்பு பதிவு, பள்ளியிலேயே செய்யப்படுகிறது. இதில், வேலைவாய்ப்பு பதிவுக்கு, ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. கடைசி நேரத்தில், ரேஷன் கார்டு குறித்த, குளறுபடிகளை தவிர்க்க, நடப்பாண்டில், "நாமினல்ரோல்' தயாரிக்கும் போதே, ஒவ்வொரு மாணவரின், ரேஷன் கார்டு விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், தேர்வு முடிவு வெளியான உடன், வேலைவாய்ப்புக்காக, பதிவு செய்வது மிக எளிதாக்கப்பட்டுள்ளது.

பி.எப்., சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண்

தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர், வேறு நிறுவனத்திற்கு மாறினாலும், இ.பி.எப்., நிரந்தர கணக்கு எண்ணை, தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது, ஒரு நிறுவனத்தில் இருந்து, வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், தன், பழைய நிறுவனத்தின் இ.பி.எப்., கணக்கை, புதிய நிறுவனத்திற்கு, இணையதளம் வாயிலாகவே மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி, கடந்த 2013ம் ஆண்டு, அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும், பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் டிஜிட்டல் கையொப்பங்களை, இ.பி.எப்.ஓ.,விடம் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளன.

இதனால், அந்நிறுவனங்களில் இருந்து, வேறு நிறுவனங்களுக்கு மாறுவோர், இ.பி.எப்., கணக்கை மாற்ற, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி உள்ளது. இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில் தான், இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு எண் திட்டம் அறிமுகமாக உள்ளது. இதனால், ஒருவர் எங்கு பணியாற்றினாலும், அவரிடம் பிடித்தம் செய்யப்படும், தொகை, இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு எண்ணின் கீழ், இணையதளம் வாயிலாகவே வரவு வைக்கப்படும்.

Friday, January 17, 2014

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் 23ம் தேதிக்குள் செலுத்த தேர்வு துறை உத்தரவு

   பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது.  இந்த ஆண்டு சுமார் 12 லட்சம்  மாணவ, மாணவியர்  தேர்வு எழுதுகின்றனர். அதற்கான இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்கிடையே  பிளஸ் 2 தேர்வை எழுத உள்ள  மாணவர்களின் இறுதிப் பட்டியல் (நாமினல்ரோல்) அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று வந்துள்ளது.  தவிர, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  தேர்வுக் கட்டணம் செலுத்துவது குறித்து தேர்வுத் துறை அனைத்து பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பத்தாம்  வகுப்பில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் க ட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில்  படிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக  ணீ115 செலுத்த வேண்டும். எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த  வேண்டியதில்லை. பிசி மற்றும் ஓசி  மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், மேற்கண்ட தேர்வுக் கட்டணத்தை அந்தந்த பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  மாணவர்களிடம் இருந்து 17ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் கட்டணத்தை வசூலித்து கருவூலங்கள் மூலம் 24ம் தேதி  தேர்வுத் துறை  கணக்கில் செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், நாளை, 43,051 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

சொட்டு மருந்து வழங்கும் மையம், காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, 19ம் தேதி ஒரு தவணையும், அடுத்த மாதம், 23ம் தேதி, இரண்டாம் தவணையும், சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன், சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில், மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், முகாம் நாட்களில், சொட்டு மருந்து கொடுப்பது அவசியம

். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு, விரலில் மை வைக்கப்படுகிறது. இது, விடுபடும் குழந்தைகளை கண்டறிய உதவுகிறது. முகாம் அன்று, தனியார் டாக்டர்களும், போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், முகாம் அன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். நடமாடும் குழு: முகாம் நடைபெறும் நாள் அன்று, பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக, முக்கிய பஸ் நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், ஆகியவற்றில், 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு, போலியோ சொட்டு மருந்து வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் பணியில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட, அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

டி.ஆர்.பி., உத்தரவால் பட்டதாரிகள் பரிதவிப்பு

   ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால், பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர். ஆக., 17, 18 ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, ஜன., 20 முதல் 27 வரை, அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 'தாள்- 2 ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும். இதனால் 'செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது, டி.ஆர்.பி.,யின் உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து, சான்றிதழ்களை கேட்டவண்ணம் உள்ளனர். கல்லூரிகள், பல்கலையையும்; பல்கலைகள், அந்தந்த கல்லூரிகளையும் கைகாட்டுவதால், சான்று பெறமுடியாமல், தேர்ச்சி பெற்றவர்கள் தவிக்கின்றனர். கல்லூரியில் அல்லது தொலைநிலைக் கல்லூரியில் படித்தபோது 'முடிவு நிறுத்தி வைப்பு' (வித்ஹெல்டு) அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பாடத்திற்கான சான்று, பலருக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பல்கலைகள், 'கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என, பதில் கூறுகின்றன.

கல்லூரிகளில் கேட்டால், 'பல்கலையில் இருந்து அதுபோன்ற சான்றிதழ்கள் வரவில்லை' என கூறுகின்றனர். 'பல்கலையால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை' என்ற சான்றும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரிகள் தர மறுக்கின்றன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பில் 90 சதவீதத்திற்கும் மேல், 'செமஸ்டர்' வாரியாக சான்றிதழ்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது. 'புதிய உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைத்து அரசுத் துறைகளில், அடுத்து எந்த பணியிடங்களுக்கு, இதுபோன்று 'செமஸ்டர்' வாரியான சான்றிதழ்கள் கோரப்படுமா என, தெரியவில்லை. கடந்த இரு டி.இ.டி., தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு போல, இம்முறையும் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

தமிழ்த் தொகுப்புகள்: சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)

Thursday, January 16, 2014

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை சட்டப்படியான அளவீட்டில் வழங்க  வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 21ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது.தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 ஆசிரியர்களில் 74 ஆயிரத்து 200 பேர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 மற்றும் ரூ.4,200 என்ற அளவீட்டில் ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை 1.6.2006ம் தேதி முதல் மாற்றி அமைக்க வேண்டும், அரசுக்கு தவறான தகவல் தந்ததற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

வழக்கு தொடர்பாக  கடைசி கட்ட விசாரணை கடந்த 7ம் தேதி நடந்தது. இதில் வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Wednesday, January 15, 2014

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது

நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் குறைத்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், விண்ணப்பத்துடன், குறிப்பிட்ட தொகையை கட்டணமாக, தேர்வு துறை இயக்குனரகத்துக்கு செலுத்த வேண்டும். நடப்பு ஆண்டில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், பணிகளை, தேர்வு துறை வேகப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்க உள்ளது

   . எனவே, தற்போது, தேர்வு கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. கல்வி துறை உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்புக்கு, தேர்வு கட்டணமாக, 125 ரூபாய் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில், 115 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது குரூப் படிக்கும், பிளஸ்2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுத உள்ள மாணவர்கள், 225 ரூபாய் செலுத்த வேண்டும். செய்முறை தேர்வு இல்லாதவர்களுக்கு, 175 ரூபாய் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை, வரும், 17ம் தேதி முதல், 23ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tuesday, January 14, 2014

25 ஆண்டுகள் பணி முடித்தால் ஊக்க விருது வழங்க வேண்டும TNPTF

் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊக்க விருது வழங்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் நகரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயற்குழுகூட்டம் மாவட்டதலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. வெண்ணந்தூர் வட்டார செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, மாவட்ட செயலாளர் தங்கவேல், முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உயர்கல்வி படிக்க முன்னேற்பு ஆணை கிடைக்க பெறாத ஆசிரியர்களுக்கு பின்னேற்பு ஆணைகள் வழங்க வேண்டும். 25 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊக்க விருது வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு கட்டணம் அறிவிப்பு

  "அரசு பொதுதேர்வு எழுத உள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், தேர்வு கட்டணம் வசூலிக்க,” அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.115; பிளஸ் 2 மாணவர்களில் 'பிராக்டிக்கல்' தேர்வுள்ள பாடங்களுக்கு ரூ.225; 'பிராக்டிக்கல்' தேர்வில்லாத பாடங்களுக்கு ரூ.175 வீதம், ஜன.,17 முதல் 23ம் தேதிக்குள், தலைமை ஆசிரியர் வசூல் செய்யவேண்டும். அரசு வங்கி கணக்கில், ஜன.,23 அன்று செலுத்தவேண்டும்.

அதற்கான விபரங்களை, ஜன.,24ல் கல்வி அலுவலரிடமும், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஜன.,27ல் அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனரிடம் ஒப்படைக்கவேண்டும், என தேவராஜன் தெரிவித்துள்ளார். சலுகை: கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், தேர்வு கட்டணமாக, ரூ.125 வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு, ரூ.115 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசில் 4,000 வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில், இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்கிறது. சில தேர்வுகளுக்கு எழுத்து தேர்வு மூலமும், சிலவற்றுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓர் ஆண்டில், என்னென்ன பதவிகள், தேர்வுகள், எந்த தேதிகளில் நடக்கிறது; எப்போது ரிசல்ட் அறிவிக்கப்படுகிறது;

நேர்காணல் எப்போது உள்ளிட்ட முழு விவரங்களுடன் கூடிய ஆண்டு தேர்வு கால அட்டவணையை, 2012ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த நட்ராஜ் அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து ஆண்டுதோறும், இதுபோன்ற கால அட்டவணை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான கால அட்டவணையை ஜன.,10ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் வெளியிட்டார். மொத்தம் 23 வகையான தேர்வுகள் இந்தாண்டு நடத்தப்படவுள்ளன. இதில் அதிகபட்சமாக வி.ஏ.ஓ., பணிக்கு, 2,342 பேரும், குரூப் 2 (நேர்காணல் இல்லாதது) பணிக்கு 1,181 பேரும், ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுக்கு 98 பேரும், தேர்வு செய்யப்படுகின்றனர். இது தவிர குரூப்-2 (நேர்காணல்) தேர்வு, குரூப்-4 தேர்வு ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் காலியிடங்கள் அறிவிக்கப்படவில்லை.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களும் தோராயமானவை; அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தாண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம் 4,000 பேர் தேர்வு செய்யபடவுள்ளனர். இது போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபரங்களுக்கு: www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

Monday, January 13, 2014

அ தே.இ - எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மார்ச் 2014 மாணவர்களுக்கான தேர்வு தொகை ரூ.115/- ஜனவரி 17 முதல் 23 வரை வசூலிக்கவும், அரசு கணக்கில் ஜனவரி 23ம் தேதி செலுத்த உத்தரவு

டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய நெருக்கடி: டி.ஆர்.பி., உத்தரவால் அதிருப்தி

  ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில், 12,596 பேரும், தாள் 2ல், 14496 பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில், பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இதில், தாள் 2ல், 2ஆயிரத்திற்கும் மேல், கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களாக, 'இளங்கலை பட்டப்படிப்பில், பல்கலை, கல்லூரிகள் வழங்கிய, செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டப்படிப்பு சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளிக்கப்படாத சான்றுகள் அதற்குப்பின் ஏற்கப்படமாட்டாது,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பட்டப் படிப்பின் தொகுப்பு மதிப்பெண் சான்று மட்டுமே கேட்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கேட்டு, டி.ஆர்.பி., அதிர்ச்சி ஏற்படுத்தியது. 1980 மற்றம் 1990களில் ரெகுலர் அல்லது தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றோர், 80 சதவிகிதத்திற்கும் மேல், இதுபோன்ற செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பில்லை. டி.ஆர்.பி.யின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது: பொதுவாக அரசுப் பணிகளுக்கும் டிகிரி சான்று மற்றும் மதிப்பெண் சான்று மட்டும் கேட்பது வழக்கம். கடந்த டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதே வழக்கம் தான் கடைபிடிக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றுகள் கேட்கப்பட்டுள்ளன, குழப்பமாக உள்ளது. 6வது செமஸ்டருக்கான சான்றே வழங்கமாட்டார்கள். '

   டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்டு, கல்லூரிக்கு சென்றால், சம்பந்தப்பட்ட பல்கலையில் கேளுங்கள் என்கின்றனர். பல்கலைக்கு சென்றால், மீண்டும் அந்த சான்றிதழ் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட சான்றிதழின் ஜெராக்ஸ் வேண்டும். ஒரு செமஸ்டர் சான்றுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். சான்று காணாமல் போனதாக போலீஸ் எப்.ஐ.ஆர்., வேண்டும் என, ஒரு மாதத்தில் நடக்க சாத்தியமில்லாத வழிகளை கூறுகின்றனர். தேர்ச்சி பெற்றும் நிம்மதி இல்லை. அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, தெளிவுபடுத்த வேண்டும், என்றனர்.

Sunday, January 12, 2014

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு விண்ணப்பிக்க ஜன. 20 வரை வாய்ப்பு

தேசிய வருவாய் வழி, திறன்படிப்பு தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஜன.,20 வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவி தொகை திட்டத்தேர்வு பிப்.,22ல் நடக்க உள்ளது. தேர்வு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 செலுத்த வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு, பிளஸ்2 வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு எழுதுபவர்கள், ஜன.,10 வரை, www.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பித்தபின், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணத்துடன், ஜன.,21, 22 ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலங்களிலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும் ஒப்படைக்க வேண்டும்.